நெஞ்சத்தைக் கிள்ளும் கவிதைகள்

கவித்துவம்

பக்கம் பக்கமாக சொல்லவேண்டியதை எல்லாம் சுருக்கமான வார்த்தைகளில் நறுக்கென சொல்வதே கவிதை. சில கவிதைகள் நெஞ்சுக்குள் நுழைந்து மனதைப் பிசைந்துவிடும். அப்படிப்பட்ட சில கவிதைகள்.

ஓர் எழுத்து

ஒரு ம் அதிகாரம் செய்கிறது

ஒரு ம் மிரட்டுகிறது

ஒரு ம் இதமாகிறது

ஒரு ம் பணிகிறது

ஒரு ம் கேள்வி கேட்கிறது

ஒரு ம் பதிலுரைக்கிறது

ஒரு ம் ஆம் என்கிறது

ஒரு ம் இல்லை என்கிறது

ஒரு ம் முறைக்கிறது

ஒரு ம் சிரிக்கிறது

ஒரு ம் ஆமோதிக்கிறது

ஒரு ம் எதிர்க்கிறது

ஒரு ம் ம் என்கிறது

ம்

  • இளமதி

ஆறுதல்

எங்கெங்கோ ஆறுதல் தேடி அலைந்து

ஓர் நாள் உங்களிடமே

தஞ்சம் புகுவீர்கள்.

அதை விட ஒரு ஆறுதலை

வேறெங்கும் கண்டிருக்க மாட்டீர்கள்.

  • ஸ்ரீநி

Leave a Comment