பெண் இன்னமும் அடிமையா..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : ஆணும், பெண்ணும் சமம் தானா..? ஒற்றுமையாக இருக்க முடியுமா?

  • எம்.சசிகலா, சாத்தூர்.

ஞானகுரு :

பெண் மயில் என்றால் ஆண் யானை. இரண்டும் முற்றிலும் வெவ்வேறு இனங்கள் என்பதால் ஒருபோதும் சமமாக முடியாது. ஆனால், ஒரே காட்டுக்குள் மானும் புலியும் வாழ்வது போன்று ஒரே வீட்டுக்குள் இருவரும் ஒற்றுமையாக வாழ முடியும்.

ஆணை விட பெண்ணுக்கு மனம் வேகமாக முதிர்ச்சி அடைகிறது. அதனால் தான் பள்ளியில் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் அதிக மதிப்பெண் வாங்குகிறார்கள். அதனால் ஆணை தன்னைவிட அறிவு குறைந்தவனாகவே ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

அதேநேரம், பெண்ணுக்கு அறிவு தேவையில்லை என்பது ஆணின் எண்ணம். அலங்காரப் பொம்மையாகவும், அடிமையாகவும் பெண் இருக்க வேண்டும் என்பதே ஆணின் எதிர்பார்ப்பு. அப்படித்தான் இது வரை அடக்கி வைத்திருந்தான்.

இந்த யுகத்தில் பெண்ணுக்கு விழிப்பு வந்திருக்கிறது. அதனால் விடுதலையாகிப் பறக்க ஆசைப்படுகிறாள். அதேநேரம், ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை உணர்வு உடலோடு ஒட்டிக்கிடக்கிறது. பிள்ளையின் அன்புக்கு அடிமையாக இருக்கிறாள். இந்த அடிமைத்தனமே வீட்டுக்குள் ஆணுடன் பெண்ணை ஒற்றுமையாக வாழ வைக்கிறது.

Leave a Comment