தமிழில் பாடப் புத்தகங்கள், ஸ்காலர்ஷிப்

காமராஜர் நினைவலைகள் – 21

கல்வி சீர்திருத்தம் என்பது மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதுடன் நின்றுவிடுவதில்லை. கல்விக்குத் தேவையான அனைத்து முன்னேற்றங்களுக்கும் காமராஜர் துணை நின்றார்.

காமராஜரே முதன்முதலில் தமிழிலே பாடப்புத்தகங்கள் வெளியிட வழி செய்தவர். கோவை அரசினர் கலைக் கல்லூரியிலும் மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் அரசியல் பாடங்களைத் தமிழில் கற்றுத் தருவதற்கும் வழிவகைகள் செய்தார்.

ஏழை, எளிய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்கினார். தொழில்நுட்பம், கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை, காலநடைத் துறை, அரிசன நலத்துறை ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கி, இத்துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கி நாட்டிற்கு அவர்களை வழங்கினார் காமராஜர்.

அறிவு வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன் முதலாகப் பொது நூலகச் சட்டத்தை ஏற்படுத்தி, 454 கிளை நூங்கங்களைக் காமராஜர் அமைத்தார். எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மத்திய நூலகங்கள் இவ்வாறு ஏற்பட்டன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment