காமராஜர் நினைவலைகள் – 18
வீட்டில் இருக்கும் பிள்ளை பள்ளிக்குப் போனால் வயிறும் நிறையும், படிப்பும் கிடைக்கும் என்று ஏழை, எளியவர்களும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினார்கள்.
எங்கும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எல்லோருக்கும் இலவசக்கல்வி – இலவச்ச் சீருடைகள். இலவச மதிய உணவுகள் – தமிழ்நாட்டில் கல்வி நிலை உயர்ந்தது. காலங் காலமாக கல்வி கற்ற்றியாதவர்கள் எல்லாம் கல்வி கற்றார்கள். காமராஜரின் திட்டங்களினால் கல்வி பெருகியது.
எல்லாக் கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் ஆயிரக்காணக்கான, இலட்சக்கணக்கான இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமே. அத்தனை பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எங்கே போவது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கும் ஒரு வழியைக் காமராஜரே கண்டுபிடித்துச் சொன்னார். அது என்ன?
‘நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து விடலாமே. அம்மா, அப்பா – படம், பட்டம், மரம், மாடுன்னு கற்றுத்தரப் பயிற்சி ஆசிரியர்தானா தேவை? என்றார் காமராஜர்.
அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவரகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. இவைகளை எல்லாம் ஓராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒழுங்காக பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
அதுமட்டுமின்றி எல்லா கிராமங்களிலும் இரவுப் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. முதியோர் கல்வி கற்கலானார்கள். எழுத்துக்கள் – எண்கள்- எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்கள்.
- நாளை பார்க்கலாம்
