சீருடையால் வந்த மிகப்பெரும் மாற்றம்

காமராஜர் நினைவலைகள் – 16

காமராஜர் கொண்டுவந்த பள்ளிச்சீருடை திட்டம் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதாவது, உடுத்த நல்ல உடை இல்லை என்ற காரணத்தால் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் ஏராளமான பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் தைரியமாக பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

குறிப்பாக, கிராமப்புறங்கள், ஏழை குடும்பங்கள், பெண் குழந்தைகளிடம் இந்தத் திட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பல குடும்பங்களுக்கு பள்ளி உடை வாங்குவது கூட பெரிய செலவாக இருந்தது. இலவச சீருடை கிடைத்ததால், பெற்றோரின் சுமை குறைந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஆர்வம் அதிகரித்தது.

தொடக்கத்தில் இந்தத் திட்டத்திற்கு அரசு நிதியுடன் மட்டுமல்லாமல், பொதுமக்கள், நன்கொடையாளர்கள், துணிக்கடை உரிமையாளர்கள், தையல் தொழிலாளர்கள் ஆகியோரும் துணி வழங்குதல், தைத்து வழங்குதல் போன்ற வழிகளில் பங்களித்தனர். பின்னர் அரசு நேரடியாக நிதி ஒதுக்கி திட்டத்தை விரிவுபடுத்தியது.

1959-க்குள் இந்தத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் அரசு அதிக நிதி ஒதுக்கி, இலவச சீருடை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தியது. 1961-இல் சுமார் 3.6 லட்சம் மாணவர்கள் பயனடைந்த நிலையில், சில ஆண்டுகளில் அது 9.4 லட்சம் மாணவர்களாக உயர்ந்தது.

காமராஜரின் சீருடைத் திட்டம் வெறும் துணி வழங்கும் திட்டமல்ல. அது குழந்தைகளின் மனதில், நானும் மற்றவர்களைப் போலவே மதிப்புக்குரியவன், “என் வறுமை என் கல்விக்குத் தடையல்ல, “நான் யாரையும் விடக் குறைந்தவன் அல்ல என்ற தன்னம்பிக்கையை விதைத்தது.

காமராஜரின் இலவச சீருடைத் திட்டம் ஒரு ஆடை வழங்கும் நலத்திட்டம் மட்டுமல்ல; வறுமை, சாதி, சமூக வேறுபாடு ஆகியவற்றை குழந்தைகளின் மனதில் இருந்து அகற்றி, “எல்லோரும் சமம்” என்ற ஜனநாயகச் சிந்தனையை வகுப்பறையிலேயே விதைத்த சமூகப் புரட்சி என்று வரலாற்றாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment