என்ன செய்தார் சைதை துரைசாமி – 508
மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் போன்று மலிவு விலை உணவகம் (அம்மா உணவகம் என்ற பெயர் பின்னர் சூட்டப்பட்டது) செயல்படுத்துவதற்கு முதல்வர் ஜெயலலிதா மிகவும் மகிழ்ச்சியுடன் அனுமதி கொடுத்தார்.
தமிழகம் முழுக்க 1,000 உணவகம் தொடங்குவோம். முதலில் சென்னையின் 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் மலிவு விலை உணவகம் தொடங்கலாம் என்று அவரே ஆர்வம் காட்டினார். முதல்வர் ஜெயலலிதா காட்டிய ஆர்வமும் அனுமதியும் மேயர் சைதை துரைசாமிக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது.
அதனால், மலிவு விலை உணவகம் பற்றிய அறிவிப்பை மாநகரப் பட்ஜெட்டில் அறிவித்தார். முதல்வரிடம் நேரடியாகப் பேசி அனுமதி பெற்றுவிட்டதால், இந்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடும் என்று மேயர் சைதை துரைசாமி நம்பினார். ஆனால், ஜெயலலிதாவின் உத்தரவை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
எனவே, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் தானே நேரில் சந்தித்து இந்தத் திட்டம் குறித்துப் பேசினார். எல்லோரும், ‘விரைவில் கொண்டுவருவோம்’ என்று உறுதி அளித்தார்களே தவிர, அதற்கான பணி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.
இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் குறித்து முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம் மேயர் சைதை துரைசாமி கேட்டபோது பொதுவாக, ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’, ‘காத்திருங்கள்’, ‘வேறு முக்கியமான வேலைகள் நடக்கிறது’ என்றெல்லாம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டே இருந்தனர்.
அதிகாரிகள் காலம் கடத்துவது சைதை துரைசாமிக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது.
- நாளை பார்க்கலாம்.
