டிஜிட்டலில் ‘கறுப்பு ரோஜா’ ரிலீஸ்

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கைப் பதிவு

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் டாக்குமென்டரி தொடரான, ‘கறுப்பு ரோஜா’ மீண்டும் இணையத்தில் வெளியாகிறது.

ஃபார்ச்சூன் நெட்வொர்க் நிறுவனம் சார்பில் ஆர்.பிரபாகரன் தயாரித்த ‘கறுப்பு ரோஜா’ டாக்குமென்டரி தொடர் ஜனவரி1, 2011 முதல் டிடி பொதிகையில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

காமராஜரின் ஒரிஜினல் வீடியோ, வீடியோ காட்சிகளுடன் தயாரிக்கப்பட்ட டாக்குமென்டரி தொடரில் மறைந்த அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு, காமராஜின் அரசியல் குரு தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, உதவியாளர் வைரவன் போன்றவர்களின் அரிய பேட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த தொடருக்காக விருதுநகர் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணம் செய்து காமராஜ் வாழ்க்கையை சின்னத்திரை நடிகை மோனிகா தொகுத்து வழங்கியிருந்தார்.

இறுதிக்காலத்தில் காமராஜுடன் நெருக்கமாக இருந்த குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி போன்றவர்களின் பேட்டியும் பிரபல பேச்சாளர்கள் நெல்லை கண்ணன், பழ.கருப்பையா, தியாகு போன்றவர்களின் அனுபவங்களும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன. அதோடு நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் பெருந்தலைவர் காமராஜருக்கு இருந்த நெருக்கத்தை நடிகர் ராதாரவி சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார். அதே போன்று காமராஜருடன் நெருங்கிப் பழகிய பிரபலங்களின் அனுபவங்கள் இடம் பெற்றன.

கே.எஸ்.சங்கர் ஒளிப்பதிவில் என்.கணேசன் இசை அமைக்க கேசவன் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த தொடருக்கான வரலாற்று சம்பவங்களை எஸ்.கே.முருகன் எழுத, எம்.நிர்மல் இயக்கியிருக்கிறார்.

டிடி பொதிகையில் ஒளிபரப்பான இந்த தொடர் ஞானகுரு இணையதளத்தில் தினமும் சின்னச்சின்ன வீடியோவாக வெளிவருகிறது. இதற்கு முன்னோட்டமாக வெளியாகியுள்ள பெருந்தலைவர் காமராஜருக்கான புகழஞ்சலி பாடலைக் கேட்டு ரசியுங்கள்.

YouTube player

Leave a Comment