பகலில் குட்டித் தூக்கம் போடுறீங்களா..?

ஏழு வகை ரெஸ்ட்

மனிதர்கள் துடிப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதற்கு ஓய்வு ரொம்பவே முக்கியம். வேலை செய்யாமல் இருப்பதெல்லாம் ஓய்வு அல்ல, ஏழு வகையில் ஓய்வு எடுக்க வேண்டும்.

  • உடலுக்கு தூக்கம் என்பதே சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஓய்வு. போதிய அளவுக்கு இரவு தூங்குவது மட்டுமின்றி பகலிலும் குட்டித் தூக்கம் போடலாம். மென்மையாக மசாஜ் செய்வதும் உடலுக்கு நல்ல ரெஸ்ட்.
  • வேலைப்பளு, குடும்பப் பிரச்னை போன்றவைகளை யோசித்துக்கொண்டே இருப்பதை நிறுத்தி வைப்பது மனதுக்கு ஓய்வு. மனம் சும்மா இருக்காமல் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கும் என்பதால் புத்தகங்கள் படிப்பது, மூச்சுப் பயிற்சி செய்வது, நண்பர்களுடன் பேசுவது போன்றவை மனதுக்கு ஓய்வு தரும்.
  • வீடு, அலுவலகம் என்று ஒரே இடத்தை மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டு இருப்பதிலிருந்து புதிய ஊர், புதிய இடங்களுக்குச் செல்வது சுற்றுச்சூழல் ஓய்வு. இதுவும் மிகவும் அவசியம்.
  • தொந்தரவான மனிதர்கள், நெகடிவ் எண்ணம் உள்ளவர்கள், குழப்பமானவர்களிடம் இருந்து விலகி நிற்பது சமூக ஓய்வு.
  • எப்போதும் செல்போனில் நோட்டிபிகேஷன், ரீல்ஸ் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிராமல் டிஜிட்டல் பொருட்களிடம் இருந்து விலகுவதும் அவசியமான ரெஸ்ட்.
  • கடற்கரை, பூங்கா, அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு போன்றவை மனதுக்கு இதமாக இருப்பதுடன் எந்த செலவும் இல்லாமல் மகிழ்ச்சி தரக்கூடியவை. இங்கு செல்வதும் தேவையான் ஓய்வு.
  • நேரம் காலம் போவதே தெரியாமல் எதையாவது செய்கிறீர்கள் என்றால் அதுவே உங்களுக்குப் பிடித்தமான விஷயம். அதை எத்தனை நேரம் செய்கிறீர்களோ, அத்தனை நேரம் ஓய்வு எடுப்பதாக அர்த்தம்.

Leave a Comment