ஃபேமிலி பிளானிங் வழிகாட்டி
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலைக்கு பொருளாதாரம் ஒரு காரணம் என்றால், குழந்தை வளர்ப்பது சவாலாக இருக்கிறது. அதனால், ஒற்றைக் குழந்தை போதும் என்று நிறுத்திவிடுகிறார்கள். அதேநேரம், ஒற்றைக் குழந்தை வளர்ப்பது போதுமா என்ற சந்தேகம் நிறைய பெற்றோருக்கு இருக்கிறது. அவர்களுக்குத் தான் இந்த ஐந்து ஆலோசனை.
- ஒற்றைக் குழந்தை என்றாலும் பள்ளிக்கூடம், டியூஷன், பிளே கிரவுண்ட் என்று எப்போதும் சிலருடன் சேர்ந்திருக்க முடியும். எனவே, குழந்தையின் தனிமை குறித்து கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை.
- யாருக்கு அதிக செல்லம், யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற குழப்பம் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் உருவாகிறது. ஒற்றைக் குழந்தைக்கு அந்த சந்தேகம் கிடையாது.
- சரியாகப் பகிர்ந்து கொடுத்தாலும் போட்டி, பொறாமை, சண்டை என்று இரண்டு குழந்தைகள் வீடு அதகளப்படும். ஒற்றைக் குழந்தை வீட்டில் அந்த பிரச்னை கிடையாது.
- ஒரு பிள்ளையுடன் இருப்பதற்கே தாய், தந்தைக்கு தந்தையும் நேரம் இருப்பதில்லை. ஆகவே, இரண்டாவது பிள்ளை இல்லை என்று குற்றவுணர்ச்சி அவசியம் இல்லை.
அதேநேரம், பாட்டு, டான்ஸ், விளையாட்டு, ஓவியம் என எல்லாவற்றையும் அந்த குழந்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நெருக்கடி கொடுக்காதீர்கள். ஒற்றைக் குழந்தை என்பதற்காக அதிக செல்லமும் வேண்டாம், அதிக கண்டிப்பும் வேண்டாம். தவறு செய்தால் கண்டியுங்கள், நல்லது செய்தால் பாராட்டுங்கள். நல்ல பெற்றோராக இருங்கள். அதுவே மகிழ்ச்சி.
