வாழ்க்கை வழிகாட்டி
வாழ்க்கையின் வசந்த காலம்னா அது மாணவப் பருவம் தான். மாணவர்களுக்குப் பொருளாதாரச் சுமை கிடையாது. பொறுப்புகளும், கடமைகளும் இருக்காது. தப்பு செஞ்சாலும், சின்னப்பிள்ளைன்னு மன்னிச்சிடுவாங்க.
ஆனா, கல்லூரி படிப்பு முடிஞ்சதும் எல்லாமே மாறிவிடும். தனி மனுஷனா பார்ப்பாங்க. கடமையையும் பொறுப்பையும் சுமக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்துல எந்த பாதையில் போறதுன்னு சரியான முடிவு எடுக்கிறவங்க, வாழ்க்கையில் ஈஸியா ஜெயிச்சுடலாம், நிம்மதியாவும் வாழலாம். சரியான முடிவு எடுப்பதற்கு நான்கு அறிவுரைகள்.
- உங்களுக்கு விருப்பமான வேல்லை இல்லைன்னா தொழிலைத் தேர்வு செய்யுங்க. இன்னைக்கு கிடைக்கும் பணத்தை அளவுகோளா வைக்காமல், எதிர்காலத்தைக் கணக்கில் வைச்சு தேர்ந்தெடுங்கள்.
- சம்பளம் வேணும், ஆசைப்பட்ட மாதிரியும் இருக்கணும்னா அது நடக்காது. முதல்ல பணத்துக்காக வேலை செய்யுங்க. பார்ட் டைமா உங்க ஆசைகளை நிறைவேத்திக்கோங்க.
- எந்தத் துறையில் இறங்கினாலும் கத்துக்கிறதை ஒருபோதும் நிறுத்தாதீங்க. புதுப்புது தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கும், எல்லாத்தையும் கத்துக்கிட்டு எல்லா மாற்றத்துக்கும் தயாராக இருங்க.
- எப்போதும் நேர்மையா, உண்மையாகவும் இருங்க. அது தான் உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை தரும், அந்த நம்பிக்கை தான் வெற்றியும் நிம்மதியும் தரும்.
- விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை, குற்றங்களை சகிக்கிற குணம், பொறுப்புகளை ஏத்துக்கிற பக்குவம் வந்த பிறகு வாழ்க்கைத் துணையைத் தேடுங்கள்.
இத்தனை தெளிவு இருந்தால் உங்க எதிர்காலம் நிச்சயம் சிறப்பா இருக்கும்.
