மறக்கக்கூடாத மருத்துவத் தகவல்கள்

குட்டி டாக்டர்

  • காலை உணவு தவிர்ப்பவர்களுக்கு உற்சாகம் தரும் ’டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவு குறைகிறது. எனவே, காலை உணவை மறக்காதீங்க.
  • காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
  • லிச்சி பழத்தில் நார்சத்து அதிகம் இருப்பதுடன் மலச்சிக்கல் நீக்கி உடலின் நச்சுக்கள் வெளியேற உதவுகிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம்.
  • வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து தலையில் பூசினால் தலைவலி குணமாகும்.
  • இரவு வெந்தயத்தை ஊற வைத்து, மறுநாள் காலை நீரை மட்டும் வடிகட்டி, வெறும் வயிற்றில் குடித்துவந்தால் ரத்தக் குழாய்கள் சுத்திகரிக்கப்பட்டு இதய நோய்கள் தடுக்கப்படும்.
  • பிரண்டையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. எனவே, எலும்புகள் பலமாவதற்கு வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்வது நல்லது.
  • சர்க்கரை நோயாளிகள் நாவல்பழம், நெல்லிக்காய் நன்றாக சாப்பிடலாம். மலை வாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். கொய்யா, பப்பாளி, ஆப்பிள் தினமும் 50 கிராம் அளவு சாப்பிடலாம்..

Leave a Comment