மகாபாரதத்தில் டாம் அண்ட் ஜெர்ரி

பீஷ்மன் – அம்பையின் காதல் ’நெருப்பு’

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்த்து சிரிக்காத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. பூனையும் எலியும் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டே இருக்கும். ஆபத்தில் சிக்கவைப்பதற்கு விதவிதமான முயற்சிகள் நடக்கும். அதேநேரம், எலியை பூனை ஒருபோதும் தின்றுவிடுவதில்லை. பூனையை அபாயத்துக்குள் தள்ளி எலி கொல்வதும் இல்லை.

டாம் நினைத்திருந்தால் பலமுறை ஜெர்ரியைப் பிடித்திருக்கலாம், ஜெர்ரியும் டாமை ஆபத்தில் வீழ்த்தியிருக்கலாம். ஆனால், அவர்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி இருந்தது. சண்டை ஆக்ரோஷமாக இருந்தாலும் அதில் கொலைவெறி இருக்காது. அந்த இரண்டும் எதிரிகள் மட்டுமல்ல, உயிருக்குயிரான நண்பர்கள். அவை இணைவதுமில்லை, விலகுவதும் இல்லை.

இதிகாச பாத்திரங்கள்

இதேபோன்ற வித்தியாசமான கதாபாத்திரம் மகாபாரதம் இதிகாசத்தில் இருக்கிறது. ஆம், சாகாவரம் பெற்ற பீஷ்மன் மற்றும் அவரை கொல்வதற்கு அவதரித்த அம்பை எனப்படும் சிகண்டி.

அரண்மனையில் இளவரசியாகப் பிறந்த அம்பையின் வாழ்க்கை குதூகலமாக இருந்தது. வீரமும் அன்பும் நிறைந்த காதலனும் இருந்தான். அவர்கள் அற்புதமான எதிர்காலத்தை நோக்கி காத்திருந்தார்கள்.

ஆனால், நடந்தது வேறு. தன்னுடைய வீரத்தைக் காட்டி அம்பையை பலவந்தமாகத் தூக்கிவந்தான் பீஷ்மன். கட்டாயத் திருமணம் என்ற அவலச் சிறைக்குள் தள்ளினான்.

அம்பையின் புரட்சி

ஆண்களின் சட்டத்தை மீறிய முதல் பெண் அம்பை. அரசு உத்தரவுக்கு அடிபணிய மறுத்தாள். காதலனால் ஒதுக்கப்பட்டாள். பீஷ்மனால் அவமானப்படுத்தப்பட்டாள். அதற்கு பழி வாங்குவதற்குத் துடித்தாள். அதனால் அன்பின் வடிவமாக இருந்த அம்பை விஷ ஆயுதமாக மாறினாள்.

ஆனால், காலம் விசித்திரமானது.

யார் மீது அதீத கோபம் இருக்கிறதோ, அவர்கள் மீதே அதீத அன்பும் உருவாகிறது.  அப்படித்தான் மாறிப்போனது பீஷ்மனுக்கும் அம்பைக்குமான மோதல். பெண்ணான அம்பை பீஷ்மனை அழிக்க ஆணாக வருகிறாள். அவள் பழி வாங்கும் கோபத்துக்குப் பின்னே காதலும் இருந்தது.

நெருப்பு புத்தகம்

அந்த மோதலும் காதலும் வாசகர்களுக்குப் புதிது. தமிழில் முதன்முதலாக அம்பையின் முழுமையாக கதை வெளியாகியிருக்கிறது. புத்தம்புதிய நடையில், புதிய கோணத்தில் எஸ்.கே.முருகன் எழுத்தில் வெளியாகியிருக்கிறது நெருப்பூ. இது, சிகண்டியாக மாறிய அம்பையின் சரிதம்.

மகாபாரத இதிகாசத்தைக் காதல் செய்யும் ஒவ்வொரு நபரும் வாங்கிப்படிக்க வேண்டிய புத்தகம் நெருப்பு. ஞானகுரு பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் நெருப்பு புத்தகத்தின் விலை 300 ரூபாய்.  

80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்

வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.

GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639

Leave a Comment