நட்புக்கு இலக்கணம் ரஜினிகாந்த்..?

நிஜமான தளபதி

நட்புன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நண்பன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? சூர்யான்னா என்னன்னு தெரியுமா உனக்கு? என்று தளபதி படத்தில் மம்முட்டியிடம் ரஜினிகாந்த் மனம் கொதித்து கேள்விகள் கேட்பார்.

ஓடிவந்த ரஜினி

நட்பின் வலிமையை சொன்ன தளபதி படத்தில் நல்ல நண்பராக நடித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இன்று நிஜமாகவே ஒரு நல்ல நண்பராக திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

முதல்வர் பதவி ஏற்கும் நேரத்தில் வாழ்த்து சொல்வது முக்கியமல்ல. முதல்வர் பதவியை இழந்து, ஆட்சியை இழந்து, சொந்த தொகுதியில் தோல்வி அடைந்து சோர்வடைந்திருக்கும் ஸ்டாலினுக்கு நிச்சயம் ஆறுதல் தேவை என்று உணர்ந்து சந்தித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

உதறித்தள்ளிய ராகுல்

பிரதர் பிரதர் என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஒட்டி உறவாடிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி திமுகவின் தோல்விக்கு ஆறுதல் சொல்லவில்லை. அதேநேரம், திமுகவுடன் கூட்டணி வைத்து ஜெயித்த எம்.எல்.ஏ.க்களை விஜய்க்கு ஆதரவு கொடுக்க அனுப்பி முதுகில் குத்தியிருக்கிறார்.

அதேபோன்று திமுகவுடன் நின்று தேர்தலில் ஜெயித்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவனும் நாளை ஆலோசனை செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். அரசியல் நண்பர்கள் அனைவரும் ஸ்டாலினை கைவிட்டுவிட்டனர்.

ஆனால், திமுகவின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு நல்ல மனிதராக, நல்ல நண்பராக நடந்துகொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதனால்தான் இன்னமும் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்.

Leave a Comment