புத்திசாலித்தனத்துக்கு குட்டி டெஸ்ட்

உங்களுக்கு எத்தனை மார்க்?

எல்லோருமே அவரவர்களை புத்திசாலி என்றுதான் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், ஏதேனும் ஒரு சிக்கல் அல்லது பிரச்னை வரும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிவிடுகிறார்கள்.

ஒவ்வொரு நபரும் அவரது புத்திசாலித்தனத்தின் அளவை அறிந்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், தானே முடிவு செய்யும் அளவுக்கு புத்திசாலித்தனம் இருக்கிறதா என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுத்த முடியும்.

புத்திசாலிகள் எப்படி செயல்படுவார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்.

  1. நேர் வழியை மட்டுமே தேர்வு செய்வார்கள். அதிக லாபம் கிடைக்கும் என்றாலும் குறுக்குவழியைப் பயன்படுத்த மாட்டார்கள். தோல்வி கிடைத்தாலும் துவண்டு போகாமல் உடனடியாக அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள்.
  2. தன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். பிறர் பலம், பலவீனத்தையும் அறிந்துகொள்வர்கள், ஆனால் தெரிந்ததாக காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
  3. நண்பர்களை குடும்ப விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டார்கள்.
  4. குறைவாகப் பேசுவார்கள். புறம் பேசமாட்டார்கள்.
  5. அரசியல்வாதி, விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் திறமையை ரசிப்பார்கள். அதேநேரம், அவர்களுடைய வியாபார சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.
  6. தன்னைப் பற்றி பெருமையாக பேச மாட்டார்கள், கர்வம் கொள்ள மாட்டார்கள்.
  7. தனக்குத் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவார்கள். பிறரிடம் காட்டி பெருமப்பட வேண்டும் என்று எதையும் வாங்க மாட்டார்கள்.
  8. பிறரின் வெற்றியை பாராட்டுவார்கள், அங்கீகரிப்பார்கள். அக்கறை கொள்வார்கள்.
  9. பொழுதுபோக்கு என்பது பயணமாக இருக்கும். அந்த பொழுதுபோக்கையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வார்கள்.
  10. புதிய மாற்றங்கள் ஏதேனும் வருகையில், அதை தேடிப் போகும் முதல் நபராக இருப்பார்கள்.  

இந்த 10 உண்மைகளும் புத்திசாலிகளின் குணாதிசயங்கள். இவற்றில் ஐந்துக்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபரும் தங்களை புத்திசாலியாக கருதிக் கொள்ளலாம். அதிக குணங்களை வளர்த்துக்கொள்ள முயற்சி எடுக்கலாம்.

Leave a Comment