மண்ணை விட விண்ணில் அதிக வளம்

ஏப்ரல் 12 மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்

இந்த பூமியில் இருக்கும் வளங்கள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே போகின்றன. அதனால், விரிந்து பரந்து கிடக்கும் விண்வெளியை ஆய்வு செய்து, அதிலிருந்து ஆதாயம் பார்ப்பதற்கு அத்தனை வளர்ந்த நாடுகளும் துடிக்கின்றன.

அதனாலே விண்வெளியை சொந்தம் கொண்டாடுவதில் ஒவ்வொரு நாடும் போட்டி போடுகின்றன. விமானத்தையே பெரும் சாதனை என்ற நிலையில், ராக்கெட் கண்டறிந்து அதில் மனிதன் உலகை சுற்றிவரச் செய்தது மாபெரும் சாதனை.

1961-ம் ஆண்டு இன்றைய தினத்தில் அதாவது ஏப்ரல் 12 அன்றுதான், ருஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின்  விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் மேற்கொண்டார். அதனால் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் தேதியை மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது.

விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விண்வெளிப் பிரதேசத்தை  ஆய்வு  செய்வதாகும்.  

1960 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை தொடங்கியது. இதில், 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக யூரி ககாரின் தேர்வு செய்யப்பட்டார். 

இந்தத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் விண்வெளிக்குப் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்பப்பட்டார்.

விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் (108 நிமிடங்கள்) விண்வெளியில் பறந்து, வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவந்தார்.

யூரி ககாரின் தொடங்கிவைத்த பயணம், இன்று கிட்டத்தட்ட அத்தனை பெரிய நாடுகளும் தங்கள் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்துவருகின்றன.

Leave a Comment