என்ன செய்தார் சைதை துரைசாமி – 472
மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கே செலவழிக்க வேண்டும். அந்த பணம் சரியான முறையில் செலவிடப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வது, தணிக்கைத்துறையின் முக்கியமான பணி. பொதுவாக அரசியல்வாதிகளுக்கு தணிக்கை துறை என்றாலே அலர்ஜி. ஏனென்றால், செய்த தவறுகளை சுட்டிக்காட்டும். அதனாலே தணிக்கைத்துறையையும் அதன் அறிக்கையையும் மதிக்க மாட்டார்கள். ஆனால், தணிக்கை துறையை வரவேற்ற ஒரே மேயர் சைதை துரைசாமி மட்டும்தான்.
சென்னை மாநகராட்சியில் முந்தைய ஆட்சி குறித்து தணிக்கை துறை கொடுத்த அறிக்கையை ஆய்வு செய்தார். முன்பு என்ன தவறுகள் நடந்துள்ளன என்பது தெரிந்தால்தான், அடுத்து ஒவ்வொரு திட்டத்தையும் சரியாக நிறைவேற்ற முடியும் என்பதாலே ஆய்வு மேற்கொண்டார்.
ஆனால், அப்போதுதான் முந்தைய காலத்தில் சென்னை மாநகராட்சியில் செயல்பாடுகள் குறித்து எழுப்பிய தணிக்கைத் தடைகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை மேயர் சைதை துரைசாமி கண்டுபிடித்தார். கடந்த காலத்தில் நிறைய முறைகேடுகள், தில்லுமுல்லுகள் நடைபெற்று இருப்பதையும் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தி இருந்தது.
பழைய விஷயங்களை எல்லாம் கிளறி சர்ச்சையாக்குவதற்கு மேயர் சைதை துரைசாமிக்கு விருப்பமில்லை. அதேநேரம், தன்னுடைய காலத்தில் அப்படி எந்த தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான அதிரடி நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
- நாளை பார்க்கலாம்.
