நீரிழிவு நோய் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் கவிதை வைரலாகியுள்ளது. படியுங்கள், பகிருங்கள்.
நீரிழிவு என்பது நோயல்ல;
குறைபாடு.
உட்கார்ந்திருப்பவனுக்கும் வரலாம்;
உழுபவனுக்கும் இது வரலாம்
பெரும்பாலும் இது
கணையத்தின் வேலைநிறுத்தம்;
ஆனால் அஞ்சற்க.
முறையான உணவுக்கொள்கை
மூச்சுவாங்கும் உடற்பயிற்சி
சரியான மருந்தெடுப்பு
இந்த மூன்றினாலும்
இதைக் காணாமற் செய்யலாம்
அல்லது கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு
கொரில்லா மாதிரி;
ஓடிவிட்டது என்று
பெருமூச்சு விட்டால்
பதுங்கி உங்கள்மீது
பாயும் சட்டென்று.
.
நீரிழிவு என்பது
ஒரு வாழ்க்கை முறை
அதற்குத் தயாரித்துக்கொண்டால்
தற்காக்கலாம்.
நீரிழிவு கொண்டோர்
நிலைகுலையத் தேவையில்லை
தங்களைச் ’சக்கர’வர்த்திகள்
என்று சொல்லிக்கொள்ளலாம்.
