சமையலறை மருத்துவம்
ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பு அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதம். இதவே ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. ஹீமோகுளோபின் தான் ஆக்சிஜனை எடுத்துச்சென்று உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் வழங்குகின்றது. அத்துடன் இது செல்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடை பெற்று நுரையீரலுக்கு எடுத்துச்சென்று உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. பொதுவாக, ஹீமோகுளோபின் என்பது ஆரோக்கியமான வாழ்க்கையைக் குறிக்கும் அறிகுறி.
ஹீமோகுளோபின் அளவு குறையும்போது உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமத்தை ஏற்படும். உடல் சோர்வு, தலை சுற்றல், தலைவலி, மூச்சுத்திணறல், வேகமான இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும்.
எனவே, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பதை அனீமியா என்பார்கள். இது பொதுவாக பெண்களிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆண்களுக்கான இயல்பான ஹீமோகுளோபின் அளவு 14 முதல் 18 g/dL மற்றும் பெண்களுக்கான இயல்பான ஹீமோகுளோபின் அளவு 12 முதல் 16 g/dL ஆகும். இந்த அளவுகளைவிட இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் அனீமியா ஏற்படும்.
ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக அதிகரிக்க, இரும்புச்சத்து மற்றும் அந்த இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்குத் தேவையான வைட்டமின் சி நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.
முருங்கைக்கீரை : இரும்புச்சத்து மிக அதிகமாக உள்ள கீரை. வாரம் இருமுறை சூப் அல்லது பொரியலாகச் சாப்பிடலாம்.
பீட்ரூட் : இது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க மிகவும் உதவும். ஜூஸாகவோ அல்லது பொரியலாகவோ உட்கொள்ளலாம்.
பிற கீரைகள் : அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, மற்றும் மணத்தக்காளி கீரை.
சுண்டக்காய் : உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது இரத்தத்தைச் சுத்திகரித்து
மாதுளை : தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவை விரைவாக உயர்த்தும்.
பேரிச்சம்பழம் மற்றும் உலர்திராட்சை : தினமும் 2-3 பேரிச்சம்பழம் மற்றும் சில உலர்திராட்சைகளை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம்.
அத்திப்பழம் : உலர்ந்த அத்திப்பழம் இரும்புச்சத்தின் சிறந்த மூலமாகும்.
நெல்லிக்காய் : இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இரும்புச்சத்தை உடல் கிரகித்துக்கொள்ள உதவும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.
கருப்பு எள் : எள்ளுருண்டை அல்லது உணவில் எள் பொடியைச் சேர்த்துக்கொள்ளலாம்.
கேழ்வரகு (ராகி) : ராகி கூழ் அல்லது அடை செய்து சாப்பிடலாம்.
கருப்பு கொண்டைக்கடலை மற்றும் பாசிப்பயறு: முளைக்கட்டிய பயறு வகைகளில் சத்துக்கள் அதிகம்.
ஆட்டு ஈரல் (Mutton Liver) : இரும்புச்சத்து மிக அதிகமாக உள்ள ஒரு உணவு. வாரம் ஒருமுறை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.
மீன் மற்றும் முட்டை : இவற்றிலும் இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக பனங்கருப்பட்டி அல்லது வெல்லம் பயன்படுத்துவது சிறந்தது. பொரிகடலையையும் வெல்லத்தையும் சேர்த்துச் சாப்பிடுவது இரும்புச்சத்தை அதிகரிக்க எளிய வழியாகும்.
