நீரிழிவு நோயாளி என்றாலே பழங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பார்கள். ஒரு சில மருத்துவர்கள் மட்டும் கொய்யாவை பரிந்துரை செய்வார்கள். ஆனால், வெளிநாடுகளில் எங்கேயும் கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் உணவாகக் கருதுவதில்லை. அது ஏன்..? விளக்கம் சொல்கிறார் டாக்டர் பரூக் அப்துல்லா.

பட்டிமன்றம் போன்றிருக்கும் அவரது விறுவிறுப்பான பதிவைப் படியுங்கள்.
ஆப்பிள் நமது கண்டத்தின் பழம் என்று சொல்லப்படுகிறது. நமது இந்தியாவின் வட மாநிலங்களான காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற இமய மலையின் அடிவாரப்பகுதிகளிலும் சீனா, உடைந்த சோவியத் யூனியன் நாடுகள் , ஐரோப்பா போன்றவற்றில் விளைந்தவை ஆப்பிள்கள்.
கொய்யாப்பழம் தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தது. குறிப்பாக மெக்சிகோ நாட்டைச்சேர்ந்தது என்று தரவுகள் கூறுகின்றன. அதனால் கொய்யா நமது நேட்டிவ் கனியன்று.
நியூட்ரிசன் போட்டி வைத்தால் அதாவது ஆப்பிள் Vs கொய்யா என்று பார்த்தால் எது பெஸ்ட்..?
ஆப்பிள் சத்துக்கள்
100 gram ஆப்பிளில் 52 கலோரி சக்தி.
14 gram மாவுச்சத்து அதில் 2.5 gram நார்ச்சத்து
புரதம் – 0.3 gram
ரத்த அழுத்தத்தை குறைக்கும் தாது உப்பான பொட்டாசியம் 107 mg
ரத்த அழுத்தத்தை கூட்டும் உப்பான சோடியம் 1mg
விட்டமின் சி- 7% = 4.6 IU
விட்டமின் ஏ – 1% = 54 IU
மெக்னீசியம் = 5mg
பாஸ்பரஸ் = 11mg
விட்டமின் பி3 = 0.091mg
விட்டமின் ஈ = 0.18mg
கொய்யா சத்துக்கள்
100 gram கொய்யாவில் 68 கலோரி சக்தி உள்ளது. பொட்டாசியம் 417 mg,
சோடியம் 2 mg, மாவுச்சத்து 14 gram. நார்ச்சத்து 5 gram, புரதம் 2.6 gram உள்ளது.
விட்டமின் ஏ 12%= 624mg
விட்டமின் சி 380%= 228.3mg
கால்சியம் 1%
இரும்பு 1%
மெக்னீசியம் 5% =22mg
விட்டமின் பி6 5%
பாஸ்பரஸ் = 40mg
விட்டமின் ஈ = 0.73mg
ரத்த சர்க்கரை ஏற்றும் விதத்தை கணிக்கும் Glycemic Index வைத்து இரண்டையும் சோதிக்கும் போது கொய்யா பழத்தின் Glycemic index – 32 என்றால் ஆப்பிளின் Glycemic index – 38. இருப்பினும் இந்த இரண்டு பழங்களும் ரத்த சர்க்கரையை பெரிதாக ஏற்றாத Low glycemic பழங்களாக இருக்கின்றன.
பழங்களிலேயே மிகவும் குறைந்த க்ளைசீமிக் இண்டெக்ஸ் கொண்ட பழம் – கொய்யா தான். கொய்யா பொருளாதார பேதமின்றி நம் அனைவருக்குமானது. எனவே, நீரிழிவு உள்ள வயதானவர்கள், பல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யாக்கனி சாப்பிடலாம்.
- டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
