என்ன செய்தார் சைதை துரைசாமி – 439
சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. வழக்கம்போல் மழை பெய்யும் என்ற எண்ணமே மக்களுக்கு இருந்தது. அரசுக்கும் இருந்தது. ஆனால், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்தது. நவம்பர் 30ம் தேதி சில மணி நேரத்தில் 490 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இது 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை.
சென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்தது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். மின்சாரமின்றித் தத்தளித்தனர்.. சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது அந்த மழைதான்.
அந்த நேரத்தில் ஒவ்வொரு நபரும் தங்கள் வீட்டு முன்பு மாநகராட்சி பணியாளர்கள் வந்து நிற்க வேண்டும், தண்ணீரை அகற்ற வேண்டும், மின்சாரம் தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். உடனடியாக எந்தக் காரியமும் நடக்கவில்லை என்றதும் கோபமானார்கள். மக்கள் ஆவேசம் காட்டினாலும் கோபம் காட்டினாலும், அவர்களுடைய கோபத்தின் காரணத்தைப் புரிந்துகொண்டு ஆறுதல் சொன்னபடியே பணியாற்றினார் மேயர் சைதை துரைசாமி. மக்களுக்கும் மாநகர பணியாளர்களுக்கும் பாலமாக செயல்பட்டு, சென்னையை மீட்டெடுக்கும் பணியில் அயராது உழைத்தார்.
இந்த மழை வெள்ள காலத்தில் மாநகராட்சி செய்த அற்புதமான பணிகள் எதுவுமே மக்கள் பார்வைக்கு வரவில்லை என்பதுதான் உண்மை. குற்றம், குறைகளை சுட்டிக்காட்டிய பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மாநகராட்சி மேற்கொண்ட சீரமைப்பு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டவில்லை.
இந்த பேரிடர் காலத்தில் ஈடு இணையற்ற வகையில் மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதே உண்மை. அப்படி என்ன செய்தது..?
- நாளை பார்க்கலாம்.
