என்ன செய்தார் சைதை துரைசாமி – 436
சென்னையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதாலும், நீர்நிலைகள் அழிக்கப்பட்டதாலும் திடீர் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் சென்னை தடுமாறியது என்பதே உண்மை என்பதை மேயர் சைதை துரைசாமியே அம்பலப்படுத்தினார்.
சென்னை நீர்நிலை அழிப்புகள் ஒரே நாளில் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் கூவம் சீரமைப்பு என்ற பெயரில் ஆட்களைக் கொண்டுவந்து நீர்நிலைகளுக்கு அருகே வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதித்தார்கள்.
பொதுமக்கள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததது போன்று, அரசும் நீர்நிலை ஆக்கிரமிப்பை தைரியமாக செய்தது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம், சென்னையின் நடுவே ஒய்யாரமாக வீற்றிருக்கும் வள்ளுவர் கோட்டம். ஆம், ஏரியை அழித்து உருவாக்கப்பட்டதுதான் வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவர் உயிருடன் இருந்திருந்தால், இந்த ஒரு செயலுக்காகவே அன்றைய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பார்.
இதுபோல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவால் கட்டப்பட்ட மத்திய அரசு நிறுவன கட்டிடமும் நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு சாட்சியாக நிற்கிறது.
2006-ம் ஆண்டு நீர்வழிப் பாதைகள் தொடங்கி மயானம், மந்தைவெளி, மேய்ச்சல், புறம்போக்கு என்று எல்லா பகுதிகளிலும் திமுக கட்சிக்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. திமுகவினர் ஆக்கிரமித்த அனைத்து வகை அரசு புறம்போக்கு நிலங்களையும், அவை அரசுக்கு தேவைப்படாத நிலங்கள் என்று அறிவித்து திமுக அரசாணை வெளியிட்டது. திமுகவினர் செய்த ஆக்கிரப்புகளை ஸ்டாலின் வரைமுறைப் படுத்தி காரியத்தை செவ்வனே முடித்துக்கொடுத்தார்.
இதற்கெல்லாம் இயற்கை கொடுத்த தண்டனையே 2015 வெள்ளம்.
- நாளை பார்க்கலாம்.
