ஆசிரியர்கள் ஏன் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : அறப்பணி என்பது ஆசிரியப்பணியும், அரசியல் பணியும்தானே..?

  • பி.சுந்தரேசன், அருப்புக்கோட்டை.

ஞானகுரு :

அரசியல் பணியையாவது ஓரளவுக்கு அறத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு யாரும் சம்பளம் கொடுப்பதில்லை. அவர்களுடைய திறமையால் சம்பாதித்துக்கொள்கிறார்கள். மக்களுக்கு பல திட்டங்கள் போட்டு, அதில் தாங்களும் ஆதாயம் அடைந்துகொள்கிறார்கள். ஆனால், ஆசிரியர்கள் செய்யும் பணியில் அறமும் இல்லை, அர்ப்பணிப்பும் இல்லை. அரசு பள்ளியில் 50 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர், தனியார் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்க்கும் ஆசிரியரை நம்பி தங்கள் பிள்ளையை ஒப்படைக்கிறார். ஏனென்றால், அவர்கள் வேலை பார்க்கும் லட்சணம் அவர்களுக்கே தெரிகிறது. இதைத்தான் அறம் என்கிறீர்களா..?

கேள்வி : எழுத்தாளன், கவிஞன் எப்படி உருவாகிறார்கள்..?

  • டி.கண்ணன், காரியாபட்டி.

ஞானகுரு :

எல்லா மனிதர்களிடமும் மிகச்சிறந்த கதை உண்டு. எல்லா மனிதர்களிடமும் கவிதை மனசு உண்டு. ஆனால் எல்லோரும் இதனை வெளிப்படுத்துவதில்லை. ஆனால், ஒரு சிலரை எழுத்துக்கள் தொந்தரவு செய்கின்றன. அவர்களே எழுத்தாளுமை செய்கிறார்கள். பாரதி போல் பிறவியிலே அறிவாயுதம் ஏந்தியவர்கள் உண்டு. ஆனால், பெரும்பாலோர் நிறைய படித்து, தங்கள் அறிவை வளர்த்து, பேனாவை கையில் எடுத்தவர்களே.  

Leave a Comment