ஞானகுரு பதில்கள்
கேள்வி : உடல் வலிமையால் தவறு செய்கிறார்களா அல்லது பண வலிமையினாலா..?
- எஸ்.வீரலட்சுமி சந்தோஷ், கள்ளிக்குடி.
ஞானகுரு :
தவறு செய்தவர்கள் அதிகம் இருக்கும் இடம் சிறைச்சாலை. அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடிப்பாருங்கள். உண்மையை கண்டுபிடித்துவிடலாம். பொதுவாக ஒருவருக்கு உடல் பலம் இருக்கிறது என்றால், அவர் சமாதானம் நாடுவாரே தவிர சண்டை போட மாட்டார்.
அதேபோல், பணம் வைத்திருப்பவர்கள் அதனை பாதுகாக்கவும் பெருக்கவும் நினைப்பார்களே தவிர, தவறு செய்து மாட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்வில் முன்னேறுவதற்கான ஆசையும் லட்சியமும் இல்லாதவர் மட்டுமே, தவறான பாதையைத் தேர்வுசெய்து மாட்டிக்கொள்கிறார்கள்.
கேள்வி : உண்மையாக மனிதர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்களா..?
- எம்.ரதி, மீனாட்சி நகர்.
ஞானகுரு :
ஒவ்வொரு தாயும் நேசத்தின் நிறைகுடம். ஒவ்வொரு தந்தையின் பாசத்தின் இருப்பிடம். ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு பேர் என்றால், உலகம் முழுக்க எத்தனை பேர் என்று கணக்குப் போட்டு பாருங்கள்.
