ஷவர்மா மட்டும் வேண்டாங்க…

நாஷ்டி டேஸ்டி

ஆரோக்கியத்தை விட சுவைக்கே இன்றைய இளசுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவர்களின் ஃபேவரைட் உணவுகளில் ஒன்றாக ஷவர்மா இருக்கிறது.

பொதுவாகவே ஷவர்மா நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்ட இறைச்சியால் தயாரிக்கப்படுகிறது. இறைச்சியைப் பதப்படுத்துவதில் குறைபாடு, சீதோஷ்ண மாற்றம் போன்ற காரணங்களால் ஷவர்மா விரைவில் கெட்டுப்போகும்.

ஹோட்டல்களில் ஷவர்மா இறைச்சிகள் வெளியில் கம்பிகளில் பல மணி நேரத்துக்குச் சுற்றிவைக்கப்பட்டிருக்கும். அவற்றில் பாக்டீரியா எளிதாக தொற்றிக்கொள்ளும். நன்றாக வேகவைத்த இறைச்சியில் பாக்டீரியா அழிந்துவிடும். ஆனால், முறையாக வேகவைக்காத அல்லது பதப்படுத்தப்படாத இறைச்சியில் பாக்டீரியா அழியாது என்பதால் அந்த உணவு நஞ்சாக்கிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுடன் சிக்கல் தீர்ந்துவிடும். அதேநேரம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு உயிரிழப்பு வரை ஏற்படலாம். எனவே, ஷவர்மா சாப்பிட்டவுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். எவ்வளவு விரைவில் நச்சுணவுக்கு சிகிச்சை கிடைக்கிறதோ அவ்வளவு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Leave a Comment