காவல் துறை, ராணுவம் எது வலிமையாக இருக்க வேண்டும்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : அண்டை மாநிலத்தில் தண்ணீர் கேட்பது அவமானமில்லையா… தண்ணீரை சேமித்துவைக்க முடியாதா..?

  • டி.முத்துச்சாமி, முல்லைதெரு.

ஞானகுரு:

அண்டை மாநிலத்தவர் தடுத்து சேமித்துவைக்க நினைத்தாலும், முடியாத அளவுக்கு அள்ளித் தரக்கூடியது இயற்கை. ஆகவே, மழை நீரை அணை கட்டி தடுப்பது ஒரு வகையில் இயற்கைக்கு செய்யும் துரோகமே. குளம், குட்டை, ஆறுகள் போன்ற இயற்கை வழியில் சேமிப்பதும், மழையை சரியாகத் திட்டமிட்டு பயன்படுத்துவதும்தான் சிறப்பான வேளாண்மை. அதிக நிலத்தில் பயிரிட ஆசைப்படுவதாலே அதிக நீருக்கு ஆசைப்பட நேரிடுகிறது. தேவையைக் குறைத்துக்கொண்டால் யாரும் தண்ணீருக்கு சண்டை போடும் நிலைமை வராது.  

கேள்வி : நாட்டில் வலிமையாக இருக்கவேண்டியது காவல் துறையா…. நீதித்துறையா… ராணுவத்துறையா..?

  • பி.பெருமாள்சாமி, லட்சுமிநகர்.

ஞானகுரு :

ராணுவம் வலிமையாக இருக்கும் நாடுகளில் சர்வாதிகார ஆட்சியே நடக்கும். காவல் துறை வலிமையாக இருந்தால் அராஜகவாதிகளுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும். நீதித்துறை வலிமையாக இருப்பதே ஓரளவுக்கு நல்லது. இவை எல்லாவற்றையும்விட, மக்கள் மன்றமான சட்டமன்றமும் நாடாளுமன்றமும் வலிமையாக இருப்பதே சிறப்பு.

Leave a Comment