சிரிசிரி ஜோக்ஸ்
மாப்பிள்ளை : மாமா, எனக்கு வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறது கூச்சமா இருக்குது…
மாமா : அதனால, வீட்டைவிட்டு போறீங்களா மாப்பிள்ளை
மாப்பிள்ளை : இல்லே மாமா. இந்த வீட்டை என் பேருக்கு எழுதி வைச்சுடுங்க. நான் கூச்சம் இல்லாம இருப்பேன்.
……………………
காதலி : என்னங்க, நாமளும் ஒரு வருஷமா காதலிச்சுக்கிட்டே இருக்கோம், இன்னும் கல்யாணப் பேச்சை எடுக்கவே மாட்டேங்கிறீங்க…
காதலன் : என் பொண்டாட்டி என்ன சொல்வாளோன்னு பயமா இருக்குதே…
……………..
அவர் : டாக்டர் என் மனைவிக்கு திடீர்னு மனநிலை சரியில்லாம போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
டாக்டர் : ஏன் அப்படி நினைக்கிறீங்க
அவர் : எங்க அம்மாவை பார்த்து பாசமா சிரிக்கிறா டாக்டர்
………………..
காதலி : இந்த மாசத்துக்குள்ள நாம கல்யாணம் செஞ்சுக்கணும் இல்லைன்னா ஒண்ணா தற்கொலை பண்ணிக்குவோம்…
காதலன் : நான் உசுரோட இருக்கிறதுக்கு வாய்ப்பே தர மாட்டியா டியர்
………………….
அப்பா : உன்னை ஒரு பையன் காதலிக்கிறான்னு சொன்னியே, இனிமே அவன் உன்னை பார்க்க வரவே மாட்டான்.
மகள் : அய்யோ அப்பா.. கொன்னுட்டீங்களா…
அப்பா : சேச்சே… பத்தாயிரம் ரூபா கடன் கேட்டேன், ஓடியே போயிட்டான்.












