சிரிக்கத்தான் மறக்காதீங்க…

Image

பெஸ்ட் தமிழ் ஜோக்ஸ்

அவர் : சார், உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு பாமா எப்படி..? என் தம்பிக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கோம்…

இவர் : நல்ல பொண்ணுதான் சார். என் தம்பியை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. அவனை ரெண்டு மாசம்தான் காதலிச்சா.

…………..

மனைவி : என்னங்க, நான் எப்போ சினிமாவுக்குப் போலாம்னாலும் கூட்டிட்டுப் போறீங்களே ஏங்க..?

கணவன் : அந்த நேரத்துல மட்டும்தான் நீ வாய் பேசாம இருக்க

……………………

அவன் : பொண்ணு கிளி மாதிரின்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சுடா…

இவன் : ஏன்..

அவன் : பேசுனதையே திருப்பித் திருப்பிப் பேசுறா..

…………………

நோயாளி : டாக்டர் நீங்க ஆபரேஷன் செய்யும்போது எனக்கு ரொம்பவும் வலிக்குமா..?

டாக்டர் : வலிக்குதுன்னு சொல்ற வரைக்கும் யாரும் இருந்ததே இல்லை… கவலைப்படாதீங்க.

…………….

நோயாளி : டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துக்கிட்டே இருக்குது…

டாக்டர் : அந்த மாதிரி எண்ணம் உங்களுக்கு வரவே கூடாது. அதுக்குத்தான் நாங்க இருக்கோமே…

………………….

நீதிபதி : பார்த்தா ரொம்பவும் நல்லவன் மாதிரி தெரியுறே… நீ ஏன் பொண்ணுங்களை கொலை செய்றே…

குற்றவாளி : இப்படித்தான் எல்லோரும் ஏமாந்து போறாங்க சார்.

…………………..

Leave a Comment