மகாத்மா சிந்தனைகள்
இந்த உலகில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லா தலைவர்களும் போர் நடத்தி, ரத்தம் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், காந்தி ஒருவர் மட்டும்தான் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்று சிந்தித்தவர்.
அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவரது நேரம் தவறாமை. நேரம் பொன் போன்றது என்று சொல்வார்கள். அதை நிஜமென்று நிரூபித்து வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தி. 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று திட்டமிட்டு வாழ்ந்துவந்த மகாத்மாவை தோட்டாக்களால் முடித்துவைத்தான் கோட்சே.
நேரம் தவறாமை குறித்த காந்தியின் வெற்றிமொழிகள் சிலவற்றை காணலாம்..
- தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும், ஆம் வீணாகும் நேரம் கூடுதல் ஆயுளாக கிடைக்கும்.
- அவசரமாக தவறு செய்வதைவிட, தாமதமாக சரியாக செய்வதே நல்லது.
- நேர்மையாக தொழில் செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால் முடியாதது அல்ல.
- நேரம் வீணாகும்போது வாழ்க்கை தோற்றுப்போகிறது.
- சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள், பகைமையை அன்பால் வெல்லுங்கள்.
- துணிவு இல்லையேல் வாய்மை இல்லை, வாய்மை இல்லையேல் வேறு எதுவும் இல்லை.
