ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஆலய வழிபாடு முறை எப்படி உருவானது..?
- பி.சாந்தி, அல்லம்பட்டி.
ஞானகுரு :
மனிதருக்கு பயம் வந்ததும் கடவுள் நம்பிக்கை வந்தது. சுயநலம் அதிகமானதும் ஆலய வழிபாடு உருவானது. கடவுள் தனக்கும் தன்னை சேர்ந்தவருக்கு மட்டும் அருள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே ஆலயத்தை உருவாக்கி, அதற்குள் கடவுளை கட்டிப் போட்டார்கள்.
இந்த சுயநலம் அதிகமானதால் தெருவுக்குத் தெரு ஆலயங்கள் முளைத்தன. இந்த ஆலயத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே, பிரதோஷம், நட்சத்திர பூஜை, கும்பாபிஷேகம் என்று விதவிதமாக கதைகள் சொல்லி கல்லா கட்டுகிறார்கள். உடம்புதான் ஆலயம் என்று சொன்ன சித்தர்களை மனிதர்கள் மறந்தே போனார்கள்.












