அரசியல் விமர்சனம்
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் நிறைய கட்சிகள் வெற்றிக் கணக்கு தொடங்காமலே கலைக்கப்பட்டுள்ளன. சிவாஜிகணேசன், டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் தொடங்கி பலருக்கும் இதுதான் நிலை.
இப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். அவருக்கு சீட் கிடைக்குமா என்பதை விட, வரும் தேர்தலிலாவது நாம் தமிழர் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2010ல் ஆரம்பிக்கப் பட்ட கட்சியால் இதுவரை டெபாசிட் பெற முடியவில்லை என்பது ஆச்சர்யம். ஏனென்றால் நிறைய இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே வெற்றி பெற்றுவிட்டன.
நீதி கட்சி1916ல் ஆரம்பித்து1920ல் ஆட்சியை பிடித்தது! 1949ல் திமுக ஆரம்பித்து போட்டியிட்ட 1957 முதல் தேர்தலில் 15 இடம் வென்றது,1967ல் ஆட்சியையே பிடித்தது.
1972ல் ஆரம்பித்த அதிமுக 1973இல் இடைத்தேர்தலில் வென்று1977ல் ஆட்சியை பிடித்தது.பாமக 1989 ஆரம்பித்து 1991வெற்றி பெற்றனர்,
மதிமுக 1994ல் ஆரம்பிக்கப்பட்டு 1996ல் மக்களவையில் 3சீட்டு வென்றனர்,
1996ல் தமாக துவங்கி 39 தொகுதிகளை வென்றது,
1999ல் தேர்தல் அரசியலுக்கு வந்த விசிகவும் கணக்கை துவக்கியது,
2006ல் கட்சிஆரம்பித்து விஜய்காந்த் வெற்றிபெற்று 2011ல் எதிர்க்கட்சி,
2011ல் துவங்கிய தமிழக வாழ்வுரிமைக்கட்சி முதல் தேர்தலில் தனித்து நின்று கட்டுத்தொகை பெற்று 2021ல் வெற்றி பெற்றது,
2018ல் துவங்கிய மக்கள் நீதி மையம் கமல் அவர்கள் கட்டுத்தொகை பெற்று 2025ல் ராஜ்யசபா உறுப்பினராகி விட்டார்,
இதில் சீமானுக்கு மட்டும் ஏன் வெற்றி கிடைக்கவில்லை..? சீமானின் சுயநலமும், அரசியல் வியபாரமும், அனைவரிடமும் பணத்தை பெற்றுக் கொண்டு அரசியல் அடியாளாக செயற்படுவதுமே இதற்கு காரணம் என்கிறார் அவருடன் இணைந்து பணியாற்றிய ஜெகதீசன் பாண்டியன். வரும் தேர்தலிலும் எந்த தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார். ஒருசிலரை ஜெயிக்க வைக்க உதவுவார் என்கிறார்.
உண்மையா என்பதைப் பார்க்கலாம்.












