எல்லைகள் என்பது மாயை

Image

மைக்கேல் ஜோர்டன் தன்னம்பிக்கை மொழிகள்

மைக்கேல் ஜோர்டன் விளையாட்டிற்கு இணையான ரசிகர் கூட்டம், பிறருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக, தன்னுடைய கடந்த காலம் குறித்து அவர் பேசும் பேச்சிற்கும் உண்டு.  இதோ அவரது சில தன்னம்பிக்கை மொழிகள்.

* நான் எனது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தேன், அதனாலேயே நான் வெற்றியடைந்தேன்.

-* நீங்கள் செய்ய விரும்பும் எதையும் செய்வதற்கு, இப்போது ஒன்றும் அதிக தாமதமாகிவிடவில்லை.

-* முயற்சிக்கும்வரை உங்களால் என்ன சாதிக்க முடியும் என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.

* எல்லைகள் என்பவை பயத்தைப்போன்றே பெரும்பாலும் ஒரு மாயை.

* எப்போதுமே ஒரு எதிர்மறையான சூழலை நேர்மறையான சூழலாக மாற்றிவிடுங்கள்.

* நீங்கள் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டால், அதன் பின்விளைவுகளை உங்களால் ஒருபோதும் மாற்றமுடியாது.

*  உங்களது வேலையில் நீங்கள் செயல்பட்டால், முடிவுகள் வரும் என்பதை எப்போதும் நான் நம்பினேன்.

*  செயலிலிருந்து ஒருமுறை வெளியேறிவிட்டால், அது பழக்கமாகிவிடும். ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.

* வெற்றிபெற கற்றுக்கொள்ள வேண்டுமானால், நீங்கள் முதலில் தோல்வியடைய கற்றுக்கொள்ள வேண்டும்.

.


Leave a Comment