• Home
  • சக்சஸ்
  • வெற்றி ரகசியம் உங்களிடமே ஒளிந்திருக்கிறது

வெற்றி ரகசியம் உங்களிடமே ஒளிந்திருக்கிறது

Image

இந்திரா நூயி வெற்றி மந்திரம்

வாழ்க்கையில் வெற்றி அத்தனை எளிதில் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் வெற்றியும் நிறைய பேருக்கு நிலைப்பதில்லை. இவர்களில் வித்தியாசமானவர் இந்திரா நூயி. ஒரு பெண்ணாக உலகின் தலைசிறந்த நிறுவனத் தலைவியாக முடியும் என்று எடுத்துக்காட்டாக விளங்கியவர்

வெற்றிகரமான நிர்வாகத்திற்கு இந்திரா நூயி சொல்லியிருக்கும் சில முக்கியமான பொன்மொழிகளை பார்க்கலாம்

  • வெற்றி அடைவதற்கான குணம் உங்களிடம்தான்  ஒளிந்திருக்கிறது. அதனால் எப்போதும் எதற்காகவும் உங்களை  மறைத்துக்கொள்ள வேண்டாம்.
  • ஒரு நிறுவனம் வளர்ச்சி அடையவேண்டும் என்று விரும்பினால், முதலில் நீங்கள் வளர்ச்சி அடையவேண்டும்.
  • ஒரு முடிவு எடுங்கள். அதன்பிறகு அந்த முடிவில் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் தொடர்ந்து இருங்கள்.
  • என்னால் செய்யமுடியாத ஒன்றை, வேறு ஒருவர் செய்யும்படி கேட்கமாட்டேன்.
  • தலைமை கடினமானது. அதிலும் சிறந்த தலைமை இன்னமும் கடினமானது. பூமியின் கடைசி வரை மக்களை பின் தொடர்ந்துவரச் செய்யமுடியுமென்றால், அவர்தான் சிறந்த தலைவர்.
  • ஆசைப்பட்ட பதவிக்கு வந்ததும் இலக்கை அடைந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. தொடர்ந்து நிறைய படிக்கவும், சிந்திக்கவும் தொடங்குவதுதான் நிறுவனத்திற்கு நல்லது. இதனை நான் ஒருபோதும் மறந்ததில்லை. 

Leave a Comment