ஆச்சர்யம் ஆனால் உண்மை
ஜெர்மனியின் ஃபுல்டேட்டல் பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் அன்னப்பறவை ஒன்று சிக்கி சமீபத்தில் உயிரிழந்தது. அதைக் கண்ட அதன் ஜோடிப்பறவையான மற்றொரு அன்னப்பறவை, இறந்த தன் ஜோடிக்காக துக்கம் அனுஷ்டிப்பதுபோல், அந்த ரயில் பாதையில் அமர்ந்துகொண்டது.
இதனால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட, சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டியதாயிற்று. பின்னர், தீயணைப்புத்துறையினர் பிரத்யேக கருவிகள் மூலம் மின் கம்பியில் சிக்கி இறந்த அன்னப்பறவையை அகற்றியதோடு, அதற்காக காத்திருந்த அதன் ஜோடிப்பறவையையும் பத்திரமாக அங்கிருந்து மீட்டு ஒரு நதிப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.
நம் ஊராக இருந்திருந்தால், அந்த ஜோடி பறவையை பிடித்து சூப் போட்டிருப்பார்கள்.
