கண் இமைக்காமல் கம்ப்யூட்டர் பார்த்தால் கண் புரை..?

டாக்டர் மாலா பாலகோபால், சூர்யா மருத்துவமனை


கண்ணில் உள்ளிருக்கும் சிறிய கண்ணாடி போன்ற பகுதியான லென்ஸ், கருவில் துவங்கி மனித ஆயுள் முழுவதும் வளரக்கூடிய தன்மையுடையது. இந்த லென்ஸ், தன் கண்ணாடி போன்ற தன்மையை (Transparency) இழந்து ஒளிபுகாததாக மாறினால், அதுவே கண்புரை எனப்படும். இது, பிறப்பிலிருந்தே பார்வையின்மையை ஏற்படுத்தும் காரணிகளில் முதன்மையானதாக இருக்கிறது.

கண்புரை என்பது ஒரு கண்ணை மட்டுமின்றி, இரண்டு கண்களையும் சேர்த்து பாதிக்கலாம். காரணிகளைத் தெரிந்துகொண்ட பின், முடிந்தளவு பிறவிக் குறைபாடுகளைத் தவிர்க்க முயல வேண்டும். அப்படி கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக பரிசோதனை மற்றும் அறுவைச்சிகிச்சை மிகவும் அவசியம்.

கண்ணில் அல்லது உடலில் வேறு எதுவும் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். கண்புரை பாதித்த குழந்தைகளுக்கு கண்ணின் அளவு சிறுத்திருத்தல், கண் அழுத்த நோய், விழித்திரைக் குறைபாடு போன்ற பிற கண் நோய்களும் சேர்ந்திருக்கலாம். கண்களை இமைக்க மறந்து கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டே வேலை செய்வதும் பிரச்னைதான். சீரான இடைவெளியில் கண்களை இமைக்காதபோது கண் உலர்ந்து, கருவிழிக்குச் செல்லவேண்டிய ஆக்சிஜன் தடைபடும்.

நம் உடல் இதைச் சரிசெய்யும் பொருட்டே, அதிகளவு கண்ணீரைச் சுரக்க வைக்கும். கருவிழிக்குத் தொடர்ந்து ஆக்சிஜன் கிடைக்காமல் உலர்ந்துபோனால் பார்வைத் திறன் குறையும். முக்கியமாக, சர்க்கரை நோயின் மற்றும் அதிக ரத்தம் அழுத்தம் இருந்தால் கண்களில் புரை ஏற்படும். தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும், கதிர்வீச்சுகளால் கண்களில் புரை ஏற்படுகிறது. கண் புரை முற்றிய நிலையில் இருந்தால், கண்டிப்பாக அறுவைச்சிகிச்சை மூலமாக மட்டுமே புரையை அகற்ற முடியும்.

 ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், கண் பார்வையைப் பறிக்கவும் செய்திடும். அறுவைச்சிகிச்சை முறை மிகவும் எளிதானது. அறுவைச்சிகிச்சையால் புரையினை நீக்கியபின், கண்களில் பார்வைக் கண்ணாடியைப் பொருத்திக்கொள்வதால் நல்ல பார்வை கிடைக்கும். அண்மைக்காலமாக அறுவைச்சிகிச்சை செய்யும்போதே கண்ணினுள் கண்ணாடி வில்லையைப் பொருத்தும் நிலை பரவலாக நடந்துவருகிறது

Leave a Comment