குழந்தைகளுக்கு கண் அழுத்த நோய் வருமா..?

டாக்டர் மாலா பாலகோபால், சூர்யா மருத்துவமனை


குழந்தைகளுக்கு வரும் கண் அழுத்த நோயின் ஆரம்பநிலை அறிகுறி கண்ணில் நீர் வடிதல். அதனுடன், வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவு கண் கூச்சம் ஏற்பட்டால் அது கண் அழுத்த நோய்க்கான அறிகுறியாக இருக்க  வாய்ப்புண்டு. இதை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.

 கண் அழுத்த நோய் கண் பார்வையை பாதிக்கும் அபாயமுடையது. ஆனால், பெரியவர்களுக்குக் கண் அழுத்த நோய் ஏற்பட்டால் அறிகுறிகள் வெளிப்படாது. சில வேளைகளில் சாதாரணமாக கண்ணீர் வடியும். கண் கூச்சம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் கண் அழுத்த நோய் ஏற்பட்டு நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும். இதில், சில பிரச்னைகளை சாதாரணமாக சொட்டு மருந்து போடுவதன் மூலம் சரி செய்துவிடலாம். அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்.

இதேபோன்று பெரியவர்களுக்கும் கண் புரை, கண் பார்வை மங்குதல், கண்ணில் நீர் வடிதல், கண்ணில் வலி, கண் அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம். ஆக, கண்ணில் எந்தப் பிரச்சினை வந்தாலும் கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

Leave a Comment