ருசியான சமையல் ஜோக்ஸ்

Image

சிரிச்சிக்கிட்டே படிங்க

கணவன் : என்னடி, காரக்குழம்பை டம்ளர்ல ஊத்தித் தர்றே…

மனைவி : உங்களுக்கு ரொம்பவும்தான் குறும்பு. இதுதான் நான் போட்ட காப்பி.

………………

கணவன் : செல்லம் இன்னைக்கு புரோட்டா ரொம்பவும் நல்லா செஞ்சிருக்கேன்னுதானே சொன்னேன், அதுக்கு ஏன் முறைக்கிறே…

மனைவி : அது  தோசைங்க

…………………..

மனைவி : என்னங்க… அது தண்ணி, அதை ஊத்தி சாப்பிடுறீங்க. இதோ நான் வச்ச ரசம் இங்கே இருக்கு.

கணவன் : இதுவே நல்ல டேஸ்டா இருக்கு, இது போதும்மா…

…………………

கணவன் : அடியே, காலையிலே எதுக்கு அப்பளம் சுட்டு வைச்சிருக்கே…

மனைவி : நல்லா பாருங்க, அதுதான் பூரி.

………………..

மனைவி : ஏங்க, நான் வைச்ச சூப் எப்படியிருந்திச்சு. இங்கதான கிண்ணத்தில் வைச்சிருந்தேன், எடுத்து குடிச்சிட்டீங்களா…?

கணவன் : அச்சச்சோ, அது அழுக்குத் தண்ணின்னு கீழே ஊத்திட்டேம்மா…

……………………

கணவன் : என்னம்மா, மீன் குழம்பு வைச்சிருக்கேன்னு சொல்றே, உள்ளே ஒரு மீனை கூட காணோம்…

மனைவி : மைசூர்பாக்குல மட்டும் மைசூர் இருக்குதா… பேசாம சாப்பிடுங்க.

……………….

Leave a Comment