பிசினஸ் வெற்றிக்கு சக்சஸ் மந்திரந்திரங்கள்

ஸ்டீவ் எனும் ஜீனியஸ்

உலகிலேயே தரம் வாய்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்றால் ஸ்டீவ் ஜாப் பெயரே மக்களுக்கு ஞாபகம் வரும். அவரது உழைப்பும், தெளிவான கணிப்பும்தான் அந்த நிறுவனத்தின் பெயரை மேலே மேலே கொண்டுசென்றன.

பிசினஸில் கிடைத்த தோல்வி, அவமானம், அதிர்ச்சியைகூட மாபெரும் பரிசு என்று சொல்லியிருக்கிறார் என்றால் ஸ்டீவ் மனவலிமை எத்தகையது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தோல்வியை வாய்ப்பாகவே எடுத்துக்கொண்டதால் மீண்டும் வெற்றி பெற்றார். வெற்றி பெறுவதற்கு ஸ்டீவ் சொல்லியிருக்கும் மேலும் சில வெற்றிமொழிகளை காணலாம்.

  • புதுமையான கண்டுபிடிப்புதான் கூட்டத்தில் இருந்து தலைவனை அடையாளம் காட்டுகிறது..
  • புதிதாக ஒன்று செய்யும்போது தவறு நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடனடியாக அதனை ஒப்புக்கொள். அப்போதுதான் அடுத்து ஒரு புதிய கண்டுபிடிப்பை நோக்கி நகரமுடியும்.
  • உங்கள் இதயம் சொல்லும் வழியில் தைரியமாக நடைபோடுங்கள், நிச்சயம் சரியான வழியை கண்டுபிடிப்பீர்கள்.
  • ஒரு வேலையை சிறப்பாக செய்துமுடிப்பதற்கு எளியவழி, அந்த வேலையை முழு விருப்பத்துடன் செய்வதுதான்.
  • முழு முயற்சி எடுத்து தோல்வி அடைந்தால் கவலைப்பட மாட்டேன், ஏனென்றால் நான் சிறப்பாகவே முயற்சி செய்தேன்.
  • மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களில் கவனம் செலுத்தவேண்டாம், உள் மனம் என்ன சொல்கிறது என்று கேட்டு முடிவு எடுக்கவேண்டும்.
  • என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்வதைவிட, என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.
  • வாழ்க்கை சில சமயம் தலையை கல்லால் அடிக்கும், அதற்காக நம்பிக்கை இழக்கவேண்டாம்.

Leave a Comment