டாக்டர் ராமசுப்ரமணியம் சூப்பர் ஆலோசனை
வசீகரமான முகத்துக்குத்தான் அத்தனை மனிதர்களும் ஆசைப்படுகிறார்கள். அந்த வசீகரத்துக்கு முதலும் முக்கியமான காரணமாக இருப்பது தலைமுடி.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்பது போன்று முடி இருந்தால்தான் வசீகரம் கிடைக்கும். ஆனால், இயற்கை சிலருக்கு சதி செய்துவிடுகிறது. முதுமை அடைவதற்கு முன்பே தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடுகிறது.

இன்று மட்டுமல்ல, காலகாலமாக நிறைய ஆண்களும் சில பெண்களும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னையே இது. அதே சமயம் பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் பிரச்னையும் இதுதான்.
இன்றைய நாளில் மிக இளம் வயதில் முடி உதிர்வதும் நரைத்துப் போவதும் அதிகரித்துவருகிறது. இதனால், தன் வாழ்வே சூனியம் சூழ்ந்துவிட்டதாக நினைத்து கவலைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
உண்மைதான். முடி கொட்டுவது இயற்கை என்று கருதி அதனை அலட்சியமாக விடக்கூடாது. முடி கொட்டுவதற்கான காரணங்கள் என்ன? அறிகுறிகள் என்ன? தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொண்டு, தேவையான ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டால், இந்த முடிகொட்டல் பிரச்னையில் இருந்து நிச்சயம மீளலாம்.
முடிகொட்டும் காரணங்கள்:
- ஹார்மோன் மாற்றங்கள், பரம்பரை காரணிகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், மன அழுத்தம், சில வகை மருந்துகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் பருவகால மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல் ஏற்படும்.
- மரபியல் (Genetics) காரணமா குடும்ப மரபு ரீதியாக முடி கொட்டுவது அது அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தொடர வாய்ப்பு அதிகம்.
உலகளவில் இதுவே மிகவும் பொதுவான முடி உதிர்வுக்கான காரணமாகும். ஆண் மற்றும் பெண் வழுக்கை என அழைக்கப்படும் இது, மரபணு மற்றும் ஹார்மோன் காரணிகளால் ஏற்படுகிறது. - பெண்களில் பலருக்கு தைராய்டு பிரச்னை, மெனோபாஸ் கால மாற்றங்கள் போன்றவை பெண்ணின் ஹார்மோன் சமநிலையை பாதித்து முடிகொட்டலை ஏற்படுத்தும். கர்ப்பம், மகப்பேறு, கருத்தடை மாத்திரைகள் பயன்பாடு போன்ற ஹார்மோன் மாற்றங்களாலும் முடி உதிர்தல் ஏற்படலாம்.
மனஅழுத்தம் (Stress): வேலைப்பளு, உறவுச் சிக்கல்கள், வாழ்க்கை அழுத்தம், மன உளைச்சல், கவலை ஆகியவையும் முடி உதிர்வை தூண்டும். - கடுமையான உடல் அல்லது உளவியல் அழுத்தம் டெலோஜென் எஃப்ளூவியம் (Telogen Effluvium) என்ற நிலைமையை ஏற்படுத்தி, வழக்கத்தை விட அதிகமாக முடி தலை முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
- சில மருந்துகள், தைராய்டு கோளாறுகள், லூபஸ் போன்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் மற்றும் சரும நோய்கள் முடி உதிர்வை ஏற்படுத்தும்.
பருவகால மாற்றங்களின் போதும் முடி உதிர்வது இயல்பானது. - தவறான ஷாம்பூ பயன்படுத்துதல், அதிகப்படியான வெயில் அல்லது வறட்சி போன்றவையும் அதிக அளவு ஹேர் கலர் பயன்படுத்துவது, ஸ்ட்ரெயிட்டனிங் செய்துகொள்வது, ஹீட்டிங் டூல்ஸ் பயன்படுத்துவது போன்றவை முடியை பலவீனமாக்கும்.
- ஊட்டச்சத்து குறைபாடு: உடலுக்குத் தேவையான புரதங்கள், வைட்டமின்கள் (குறிப்பாக பி12, டி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதாவது துத்தநாகம், இரும்பு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால் முடி வேரிலிருந்து தளர்ந்து விழும் உதிர்தல் ஏற்படும்.
- டான்ட்ரஃப் எனும் பொடுகு, பாக்டீரியா, ஃபங்சல் போன்ற தொற்றுகள் தலைமுடியின் அடர்த்தியை பாதிக்கும். மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்: சில உயர் தாக்கமுள்ள மருந்துகள், கீமோதெரபி போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தும்.
அறிகுறிகள் என்ன?
சீவும்போதோ, குளிக்கும்போதோ அதிகமாக முடி உதிர்தல் முதல் அறிகுறியாகும். தலைப்பகுதியில் வெற்றிடங்கள் காணப்படுவது,
முடியின் அடர்த்தி குறைவது போன்றவை முடி கொட்டப்போவதற்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தால், உடனடியாக சிகிச்சை தேவை. ஆரம்பக் கட்டத்திலேயே நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தவிர்க்க வேண்டியவை:
- முடி உதிர்வதை தடுக்க நீங்கள் ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு பயன்பெறலாம். அப்படி ஹோமியோபதி மருந்துகளை நீங்கள் உட்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
- மின்ட் அல்லது கம்ஃபர் வாசனை உள்ள பொருட்கள், பற்பசை, பாம், மூக்கு எண்ணெய் போன்றவை சில ஹோமியோபதி மருந்துகளுக்கு எதிராக செயல்படலாம்.
- அதிக காபி அல்லது டீ அருந்துவது ஹோமியோபதி மருந்தின் பயன்களை குறைக்கக்கூடும்.
- ரசாயன ஹேர் ஸ்டைலிங் ஆன ஹேர் கலர், ஜெல், ஸ்பிரே ஆகியவை முடிவேரை பாதிக்கும். தூய்மை இல்லாத தலை பராமரிப்பும், தலைமுடி சுத்தமாக இல்லாவிட்டாலும் தொற்று ஏற்பட்டு முடி கொட்டும்.
- சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடல் மீட்பு செயல்கள் பாதிக்கப்பட்டும் முடி கொட்டும். தவறான உணவு பழக்கங்களான காரம், எண்ணெய், ஜங்க் ஃபுட் அதிகமாக எடுத்துக்கொள்வதும் முடி உதிர்வை அதிகப்படுத்தும்.
முடி உதிர்தலைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:
முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை (புரதம், வைட்டமின்கள், தாதுக்கள்) வழங்கும் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ம்நல்லது.
உங்களுக்கு முடி உதிர்தல் அதிகமாக இருந்தால் ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
ஹோமியோபதி சிகிச்சை – இயற்கையான தீர்வு
ஹோமியோபதி என்பது உடலின் உள்ளக சக்தியை தூண்டி இயல்பான நிலைக்குத் திருப்பும் ஒரு இயற்கையான சிகிச்சை முறை. ஹோமியோபதியில் முடிகொட்டுவதற்கான உண்மையான காரணங்களை அடையாளம் கண்டு, அதற்கேற்ப மருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.
முடி உதிரும் பிரச்னைக்கு – பொதுவாக பயன்படும் ஹோமியோபதி மருந்துகள்:
Lycopodium: மன அழுத்தம் மற்றும் வயிற்றுப் பிரச்னை காரணமாக ஏற்படும் முடிகொட்டலுக்கு ஏற்ற மருந்தாகும்.
Natrum Muriaticum: உணர்ச்சி பாதிப்புகள் காரணமான முடி உதிர்வுக்கு தகுந்த ஹோமியோ மருந்து.
Phosphorus: முடி நரைக்கும் மற்றும் வேரிலிருந்து முடி அடர்த்தியாக விழும் நிலைக்கு சரியான ஹோமியோ மருந்து.
Silicea: தேக்க நோய்கள் காரணமாக முடி உதிரும் நிலைக்கு தகுந்தது.
Fluoric Acid: மரபியல் முடிகொட்டல் உள்ளவர்களுக்கானது.
Sepia: பெண்களில் ஹார்மோன்கள் காரணமாக முடிகொட்டும் நிலைக்கு.
.இந்த ஹோமியோ மருந்துகள் பொதுவான மருந்துகள் மட்டுமே. உங்கள் உடல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப மருந்து மாற்றப்படும். எனவே ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை இன்றி இந்த மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
முடிகொட்டுவதை ஓர் அழகியல் பிரச்னை என எண்ணாமல், உடல்நிலை குறைபாடுகளின் அறிகுறி என்றே எண்ண வேண்டும். தகுந்த பரிசோதனை, சரியான ஹோமியோபதி மருந்து மற்றும் உணவுமுறை மூலம் முடியை மீண்டும் வளர்த்துக் கொள்ள முடியும். இயற்கையாகவும், பக்கவிளைவுகள் இல்லாமல் முடிகொட்டலை கட்டுப்படுத்த ஹோமியோபதி ஒரு நம்பகமான சிகிச்சை முறையாகும்.
மேலும் ஆலோசனைக்கு:
செளபாக்யா ஹோமியோபதி கிளினிக்
போன்: 98411 08754












