பரம்பரையாக வருமா முடக்குவாதம்?

Image

டாக்டர் ரோஹினி ஹண்டா ஆலோசனை

முதுமையால் மட்டுமே முடக்குவாதம் வரும் என்று நினைப்பது உண்மையில்லை. அனைத்து காரணங்களையும் அறிந்துகொண்டால் தப்பித்துக்கொள்ளலாம்.

முடக்கு வாதம் (ருமாட்டாய்டு ஆர்த்ரிடிஸ்) என்பது மூட்டுகளில் வலி, வீக்கம்  மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு உடல் பாதிப்பு.

குறைவான நோயெதிர்ப்புசக்தி ஆரோக்கியமான மூட்டு திசுக்களைத் தாக்கும்போது  மூட்டு நோய் உருவாகிறது. முடக்கு வாதம் முதன்மையாக மூட்டுகளைப் பாதிக்கிறது என்றாலும் இது கண்கள், நுரையீரல், வாய், இதயம் மற்றும் ரத்த நாளங்களிலும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

உலக அளவில் சுமார் 20 மில்லியன் மக்களுக்கு முடக்குவாதம் உள்ளது. ஆண்களை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக பெண்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். முற்றிய முடக்கு வாதத்திற்கு எந்த சிகிச்சையும் இல்லை என்கிற நிலையே இன்றும் உள்ளது. ஆனாலும் ஆரம்பகால சிகிச்சையால் நோயைக் குறைக்க முடியும்.

ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நோய்க்கிருமிகள் உடலை ஆக்கிரமிக்கும்போது அவற்றை எதிர்த்துப் போராடுகிறது. அப்போது நோய்க்கிருமி செல்களை அழிக்க அழற்சி ரசாயனங்களை வெளியாகும்.

இந்நிலையில் உடலில் உள்ள பல மூட்டுகளை வரிசையாகக் கொண்டிருக்கும் சைனோவியம் எனப்படும் மூட்டு திசுக்கள் தாக்கப்படுகிறது. தாக்கப்பட்ட திசுக்கள் சைனோவியல் திரவத்தை உருவாக்கும். இது ஒரு மூட்டில் உள்ள எலும்புகளை  ஒன்றுக்கொன்று எதிராக நகர அனுமதிக்கிறது. ஒருவருக்கு முடக்குவாதம் இருக்கும்போது, நோயெதிர்ப்பு மண்டல செல்கள் சைனோவியத்திற்குச் சென்று அதைத் தாக்கி, வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மூட்டுகளில் வலி, விறைப்பு மற்றும் வீக்கத்திற்கும் வழிவகுக்கிறது.

ருமாடாய்ஸ்டு ஆர்தரைடிஸ் மரபணு சார்ந்தது என்பதை விஞ்ஞானிகள் இன்னமும்  நிரூபிக்கவில்லை. ஆனால், சில மரபணுக்களில் ஏற்படும் மாறுபாடுகள் காரணமாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. உடம்பில் லுகோசைட் ஆன்டிஜென் மரபணுக்களில் ஏற்படும் மாறுபாடுகள் போன்றவை, சுற்றுச்சூழல் காரணிகளாக தொற்றுகள் முடக்கு வாதத்தைத் தூண்டக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

எந்த வயதிலும் முடக்கு வாதம் ஏற்படலாம். ஆனால், ஒருவர் வயதாகும்போது  இதன் ஆபத்து அதிகரிக்கிறது. தாய், தந்தை வழியில் யாருக்காவது முடக்கு வாதம் இருந்தால், அதன் தொடர்ச்சியாக அவர்களின் சந்ததிகளுக்கும் முடக்குவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 45 சதவிகிதம் உள்ளதாக மருத்துவ உலகம் நம்புகிறது.

பாலியல் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன்கள், பாக்டீரியா (அ) வைரஸ் தொற்றுகள் ஆகியவையும் முடக்குவாதத்தை உருவாக்கலாம். உடல் பருமன் முடக்குவாதம் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும்.

ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு இதன் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்