ஃபன்னி ஜோக்ஸ்..
மனைவி : ஏங்க அடிக்கடி என் முகத்துல தண்ணீர் தெளிக்கிறீங்க..
கணவன் : உங்க அப்பாதான், உன்னை பூ மாதிரி பார்த்துக்கிட சொல்லியிருக்காரு.
………………
மனைவி : ஏங்க, நம்ம பையன் படிச்சுக்கிட்டுத்தானே இருக்கான், அவனைப் போய் அடிக்கிறீங்க..
கணவன் : அடியே, எக்ஸாமுக்குக்கூட போகாம படிக்கிறான்…
…………………….
அம்மா : நீ காந்தி மாதிரி நல்ல பிள்ளையா வருவேன்னு நினைச்சேன், இப்படி ரவுடி மாதிரி வந்திருக்கியே…
மகன் : காந்திக்கு மாதிரி 13 வயசுல எனக்கு கல்யாணம் முடிச்சு வந்திருந்தா, நான் எதுக்கு மாறப்போறேன்…
……………………….
காதலன் : டார்லிங், என் கண்ணுல என்ன இருக்குன்னு பாரேன்…
காதலி : கண் நிறைய காதல் தெரியுதுங்க…
காதலன் : அடப்பாவி, கண்ணுல தூசு விழுந்திருக்கு, அதை எடுன்னு சொன்னேன்.
…………………
மனைவி : என்னங்க நான் மாசமா இருக்கேன்..
கணவன் : நல்ல விஷயமா இருக்கு. இரு, உங்க அப்பாகிட்டே சொல்றேன்.
மனைவி : வேணாங்க. காலேஜ் படிக்கும்போது இப்படித்தான் சொன்னேன். அடி பின்னிட்டாங்க.
………………….












