பியூட்டி ஸ்போர்ட்ஸ் சேம்பியன்ஸ்..!

கொட்டிக் கிடக்குது அழகு

அழகு என்பது இயற்கையாகவே பெண்களுக்கு கிடைத்த வரம். ஒவ்வொரு பெண்ணும் ஏதேனும் ஒரு வகையில் அழகுதான். அதிலும் விளையாட்டில் ஈடுபடும் பெண்கள் அழகாக இருந்தால் கேட்கத்தான் வேண்டும், எக்கச்சக்க ரசிகர்கள் மொய்த்துவிடுகிறார்கள். அப்படி, விளையாட்டில் சாதித்தது மட்டுமின்றி அழகாலும் அசத்திய ஒருசில பெண்களை இங்கு பார்க்கலாம். .


அலிசன் ஸ்ட்ரோக்

இந்த உலகிலேயே மிகவும் அழகான விளையாட்டு வீராங்கனை என்ற  பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் அமெரிக்காவை சேர்ந்த போல் வால்ட் வீராங்கனை அலிசன் ஸ்ட்ரோக்தான். ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கியமான போட்டிகளில் அலிசன் பதக்கம் வென்றதில்லை. எனினும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உண்டு.


சானியா மிர்சா
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவிற்கு ரசிகர்கள் ஏராளம். இவர் ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டமும், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு பல பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து, குழந்தை பெற்ற பின்னும் அழகில் சற்றும் குறையாமல் இருக்கிறார்.


மிதாலி ராஜ்
இந்திய மகளிர் அணியின் கேப்டனான இவர், பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இன்றும், இந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார், மிதாலி ராஜ்.


ஸ்மிரிதி மந்தனா

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையாக இவருடைய அழகும் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடியது. மும்பை மாநிலத்தில் பிறந்த இவர், 2017ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


மானசி ஜோஷி
2019ம் ஆண்டு நடந்த பாரா உலக பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மானசி ஜோஷி. இவருடைய அழகும் அனைவரையும் வசீகரிக்கும். 2011ல் விபத்து ஒன்றில் கால்களை இழந்தவர். இவருடைய போராட்டமே இன்று வெற்றியாக மாறியிருக்கிறது. பார்பி பொம்மை தயாரிக்கும் நிறுவனம் இவரைப் போன்ற உருவ பொம்மையைத் தயாரித்து வெளியிட்டு பெருமை செர்த்தது.


தீபிகா பலிகல்
தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பலிகல் மிகச்சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனை. கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றவர். அதற்கு முன் இன்சியானில் நடந்த ஆசிய போட்டியில் வெண்கலம் வென்று தமிழகத்துக்கு புகழ் சேர்த்தவர். கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்ட இவர், அழகிலும் அசத்துகிறார்.


ஷர்மிளா நிக்கோலட்

கோல்ஃப் வீராங்கனையான இவர், பெங்களூரில் பிறந்தவர். பார்ப்பதற்கு சினிமா நடிகை போன்று இருக்கும் இவர், விளையாட்டில் மட்டுமல்ல, அழகிலும் அனைவரையும் கவர்ந்து இழுத்துவருகிறார்.


சனா மீர்
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவரான இவர், காஷ்மீரைப் பூர்விகமாகக் கொண்டவர். ஒருநாள் போட்டியில் 100 விக்கெட் சாய்த்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமை பெற்றவர். இவருடைய அழகும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கக்கூடியதாகும்.


இசா குஹா
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான இவர், எதிரணியினருக்கு ஒரு புயலாகவே இருந்தார். 11 வருட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அசைக்க முடியாத வீராங்கனையாகவும், அழகு ராணியாகவும் ஜொலித்தார்.


கோல் டொபின்
பிரிட்டனைச் சேர்ந்த ரக்பி வீராங்கனையான இவர், அழகு ராணியாகவும் தேர்செய்யப்பட்டுள்ளார்.  27வயதான இவர் சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறையில் பட்டம் பெற்றவர். அதேவேளை விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் ஆர்வம் கொண்டவர். இவரது அழகால் ஊடகங்களில் பிரபலமானார்.


 எலீஸ் பெரீ
 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான இவர், கால்பந்தாட்டத்திலும் சிறந்து விளங்குகிறார். பார்த்தால் நெஞ்சைக் கொள்ளைகொள்ளக்கூடிய அழகினை கொண்ட இந்த பெண் வீராங்கனை, தற்போது முழுநேரமாக கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்.


ஸ்டெபினி ரைஸ்
ஆஸ்திரேலியாவின் மற்றொரு அழகான பெண் வீராங்கணை ஸ்டெபினி ரைஸ். இவர் ஒரு நீச்சல் விளையாட்டு வீராங்கனை. இந்த அழகான வீராங்கனை பல தேசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்து கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


ஹோலி பெர்லிங்
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான இவர், 2013 உலகக்கோப்பையில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இந்த அழகு வீராங்கனை, ஆஸ்திரேலிய ரசிகர்களின் கனவு தேவதையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 எலிசன் ஸ்டோகி
அமெரிக்காவின்  கலிஃபோர்னியாவைச் சேர்ந்த எலிசன் ஸ்டோகி கம்பூன்றி உயரம் தாண்டுதல் மற்றும் தடகள வீராங்கனையாவார். இவர் கவர்ச்சியான மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்டவர். இவர் ஒலிம்பிக்கில் வெற்றிபெறாவிட்டாலும் தனது அழகின் மூலம்  சில கம்பெனிகளின் விளையாட்டு மாடலிங் பெண்ணாகச் செயற்படுகிறார்.


கத்தேரைன் ஹெலன் பிரண்ட்
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், சிறந்த மகளிர் வீராங்கனை என்ற விருதைப் பெற்றவர் ஆவார். 2005ல் நடைபெற்ற உலகக்கோப்பையில் விளையாடிய இவர், 14 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இங்கிலாந்து ரசிகர்களின் அழகு ராணியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மரியா ஷரபோவா
கிராண்ட்ஸ்லாம் போலவே ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைப் பெற்ற மரியா ஷரபோவா உலகிலுள்ள பலரும் நன்கறிந்த டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர், ஒரு ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை என்பதாலோ என்னவோ இவ்வளவு அழகுடைய இவருக்கு பல பிரபல கம்பெனிகளிடம் இருந்து மாடலிங் அழைப்பு வருகிறது. அதன்படி தற்போது பல விளையாட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களது பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார்.


சாரா டைலர்
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை சாரா டைலர். இவர், மக்களால் பெரிதும் விரும்பக்கூடிய அழகான ஒரு பெண் வீராங்கனை.  இவரது அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது இவரது கண்களே. இவரது அழகைப் போலவே விளையாட்டு திறமையும் அமோகமாக இருக்கும்.

இந்த பட்டியல் முடிவே இல்லாதது என்பதுதான் உண்மை. விளையாட்டில் அழகு என்பது ஒரு பொருட்டு இல்லை என்பதுதான் உண்மை. வெற்றி பெறும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் அழகுதான்.

Leave a Comment