முதியோருக்கு மூன்று பயிற்சிகள்

Image

என்ஜாய் செய்து விளையாடுங்கள்


ஆரோக்கியமான வாழ்க்கையின் அடிப்படையே விளையாட்டுதான்.  இதுதான், உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் அனைவருக்கும் உதவுகிறது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விளையாட்டுடன் தொடர்பில் இருக்கும்போது, உடலில் ஆரோக்கியத்தை நிச்சயம் காண முடியும்.

ஆனால், இன்றைய காலத்தில் வயதானவர்கள் பலரும் தமக்கு வயதாகிவிட்டது எனச் சொல்லி வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகின்றனர். இதனால், உடல்நலப் பாதிப்புகள்தான் அதிகரிக்கும். அதற்குப் பதில் அவர்கள், தங்களால் முடிந்த அதாவது தங்கள் வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளையோ அல்லது விளையாட்டுகளையோ செய்யலாம் என்கின்றனர், மருத்துவர்கள். வயதானவர்களுக்கு ஏற்ற முத்தான மூன்று பயிற்சிகள் பற்றி பார்க்கலாம்.


நடைப்பயிற்சி:
வயதானவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு வயதாகிவிட்டது எனக் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கான ஓர் எளிய உடற்பயிற்சியே நடைப்பயிற்சியாகும். இந்தப் பயிற்சியைச் செய்ய யாரையும் எதிர்நோக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை எத்தகைய வயதுடையோரும், எத்துணையுமின்றியும் செய்யலாம். வெளியில் கொஞ்சதூரம் நடைப்பயிற்சி செய்வதால்,  மனதில் இறுக்கம் குறையும். மகிழ்ச்சி கூடும். உடல் சுறுசுறுப்பு அடையும். வெளி நண்பர்களையும் சந்திக்க முடியும். கால்களுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.


யோகா:
நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டுக்குள்ளேயே யோகா செய்யலாம். இதைச் செய்வதற்கும் யாருடைய உதவியும் தேவையில்லை. யோகா செய்வதால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமடையும். குறிப்பாக, முழு முதுகெலும்பு மண்டலமும் உடலின் தசைகளைகளும் இதன்மூலம் நன்கு விரிவடையச் செய்கின்றன. தவிர, சுவாசிப்பதன் மூலம் ஆக்ஸிஜனேற்றத்தையும் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் தளர்வுக்கு வழிவகுக்கிறது.


நீச்சல்:
நடைப்பயிற்சி அல்லது யோகா செய்ய முடியாத வயதானவர்கள், தினம் நீச்சல் பயிற்சி மேற்கொண்டால், உடலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். நீச்சல் பயிற்சி செய்யும் ஒருவரால், அதிக கலோரிகளை எரிக்க முடியும். மேலும், தூக்கமின்மையையும் தவிர்க்கிறது. பசியை அதிகரிக்கிறது; மனநிலையை மேம்படுத்துகிறது; மன அழுத்தங்களின் அளவைக் குறைக்கிறது.

Leave a Comment