சூப்பர் டிப்ஸ்
வானுயர வளர்ந்து நிற்கும் வீடுகளைப் பார்க்கும்போது ஆசையாகத்தான் இருக்கும். பலரும் ஆசைப்பட்டு 20வது மாடி, 25வது மாடி என்று வாங்குவது சென்னையில் அதிகரித்துவருகிறது. அதேபோன்று கேட்டட் கம்யூனிட்டி எனப்படும் அபார்ட்மெண்ட்களில் வீடு வாங்குவதும் அதிகரித்துவருகிறது.
இவற்றில் மிகப்பெரிய அடுக்கங்களில் வீடு வாங்குவதற்கு முன்பு மிகவும் யோசிக்க வேண்டும் என்கிறார்கள், ரியல் எஸ்டேட் நிபுணர்கள். இதோ, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.
அடுக்கு மாடி வீடு வாங்குவதென்றால் எட்டு வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்ககத்தில் வாங்கவே கூடாது ,ஏன் கண்டிப்பாக அதில் விதிமீறல்கள் இருக்கும், காரணம் நிலத்தின் விலையில் இவர்கள் சி.எம்.டி.ஏ. சொல்லும் செட்பேக் விட்டு கட்டுவதில்லை, பல அடுக்ககங்களில் வெறும் 1அடி தான் செட்பேக் விட்டு கட்டுகின்றனர், பில்டர்கள் வீடு கட்டுவதற்கு ஒரு வரைபடமும், அப்ரூவல் வாங்க ஒரு வரைபடமும் தயாரித்து கட்டி விற்கின்றனர், அப்ரூவல் இல்லாமல் ஒரு தளம் அல்லது இரு தளங்கள் கூட அதிகம் கட்டி விற்கின்றனர், கேட்டால் அப்போது தான் நிலத்தின் விலைக்கு நாங்கள் அதிகம் கொடுத்த தொகையில் ஈடுகட்ட முடியும் என்கின்றனர், தனியார் வங்கி அதிகாரிகளும் இது போல முறைகேடாக கட்டப்பட்ட ஃப்ளாட்களுக்கு கடன் அனுமதி அளிக்கின்றனர், எல்லா தரப்பிலும் பெரும் பணம் லஞ்சமாக விளையாடுவதால் ஒரு வீடு வாங்கும் சாமான்யன் குழம்பிப் போய் கண்ணை மறைக்கப்பட்டு அந்த அடுக்கக வீட்டை வாங்குகிறான்.
நீங்கள் அடுக்கக வீட்டை வாங்கும் முன் சோதிக்க வேண்டியது, மூன்று பிளான்களைப் பார்க்க வேண்டும். அப்ரூவல் பிளான், ஆர்கிடெக்ட்ரல் பிளான் மற்றும் ஸ்ட்ரெக்சுரல் பிளான் என மூன்றையும் பார்த்து உங்கள் தளம் உங்கள் அடுக்கக வீடு அந்த அப்ரூவல் வரைபடத்தில் உள்ளதா என பாருங்கள்
அடுக்ககம் 8 வீடுகளுக்கு மேல் போனால் நிறைய தரக்குறைபாடுகள் வரும், ஒரு வருட வாரன்ட்டி காலத்துக்குப் பின் பல பிரச்சனைகள் தோன்றும், குறிப்பாக மேலே இருக்கும் கழிப்பறையின் நீர் உங்கள் கழிப்பறையில் இறங்கி சொட்டும், இதே போல உங்கள் கழிப்பறை நீர் கீழ் வீட்டு கூரையில் சொட்டும் , சமையலறை சிங்க் நீர், இதை ஆராய்ந்து கண்டு பிடித்து சரி செய்ய மிகுந்த பொருட்செலவு ஆகும், மன உளைச்சல்,விரோதம் மூளும், ஆயிரம் வீடு உள்ள அசோசியேஷனில் எத்தனை போட்டி பொறாமை விரோதம் கமிஷன் குளறுபடி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.
1000 வீடுகள் உள்ள கேட்டட் கம்யூனிட்டியில் செப்டிக் டாங்க் கழிவு நீர், ட்ரீட்மெண்ட் பிளான்ட் இல்லாதிருந்தால் அதை தினமும் அகற்றும் நிலை வரும், அந்த தொகை
1000 வீடுகள் இருந்தும் போர்வெல் இல்லை என்றால் என்ன பயன்? கோடை காலத்தில் எத்தனை நூறு டாங்கர் லாரியில் தண்ணீர் வாங்க வேண்டி வரும்? அந்த தொகையும் உங்கள் மெயின்டனன்ஸ் தொகையில்தான் ஏறும்.
பதினைந்து வருடமாக பெயின்ட் அடிக்காமல் விட்ட 20 மாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க எத்தனை கோடிகள் செலவாகும்?
யுடிஎஸ் எனப்படும் அன் டிவைடட் ஷேர் என்பது இங்கே ஒரு கற்பனை என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் இருக்கும் அடுக்கக பரப்பு மட்டும் உங்களுக்கு சொந்தம், அந்த நிலப்பரப்பில் 1000 உரிமையாளர் அனுமதியின்றி ஒன்றும் செய்துவிட முடியாது, உங்கள் யுடிஎஸ் சதுரடி கண்ணுக்கு தெரியாத ஒன்று.
இது போல நம் கண்ணை மறைத்து தெரியாமல் வாங்கிவிட்ட வீட்டை நாம் சிறிய லாபத்துக்கு அல்லது வாங்கிய அசல் விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவது என நினைத்தாலும், அது அத்தனை எளிதில் நடக்காத ஒன்று. அதனால் நன்றாக யோசித்து வாங்குங்கள். உயரத்துக்கு ஆசைப்பட்டு நிம்மதியை தொலைத்துவிடக் கூடாது.