• Home
  • அழகு
  • மாடர்ன் உடைக்கு கொலுசு அணியலாமா..?

மாடர்ன் உடைக்கு கொலுசு அணியலாமா..?

Image

பியூட்டி டிப்ஸ்

பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைத்து பெண்களும் கொலுசு அணிந்திருப்பார்கள். சுடிதார், சேலை, தாவணி போன்ற ஆடைகளுக்கு கொலுசு கூடுதல் அழகினை தரும். ஆனால் ஜீன்ஸ் மற்றும் அரை ஜீன்ஸ்அணிந்து வெளியில் சென்றால், கொலுசு அணிவேண்டாம். ஏனெனில் மொடர்ன் ஆடைகளுக்கு கொலுசு நன்றாக இருக்காது, அதுமட்டுமின்றி ஆடை அலங்காரத்தை கெடுத்துவிடும்.

கொலுசுகள் பல்வேறு டிசைன்களில் வடிவமைக்கப்படும், 5 முத்துக்கள் கொண்டது, 3 முத்துக்கள் கொண்டது. மெல்லிய பட்டையிலான கொலுசு மற்றும் தடிமனான மாடல்கள், இரண்டிற்கும் இடைபட்ட மாடல்கள் என்று பலவும் உண்டு. இதில் பெண்கள் கவனிக்க வேண்டியது, தங்கள் கால்களுக்கு எந்த மாரியான கொலுசு அழகாக இருக்கும் என்பதை பார்த்து அணியவேண்டும்.

கால்கள் கொஞ்சம் தடிமனாக இருக்கும் பெண்கள் மெல்லிய கொலுசு போட்டால், அவ்வளவு எடுப்பாக தெரியாது, எனவே கொஞ்சம் தடிமனான கொலுசினை அணியுங்கள்.

சற்று சிவப்பான நிறம் மற்றும் மெல்லிய கால்களை கொண்ட பெண்கள், 3 முத்துக்கள் கொண்ட மெல்லிய பட்டையிலான கொலுசினை அணியுங்

மாடர்ன் உடைக்கு நைலான், நூல் மற்றும் லெதர் போன்றவற்றால் செய் யப்பட்ட கொலுசுகள் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும். இவை மெல்லிய கயிற்றில் மீன் பொம் மைகள், சின்ன கற்கள், பாசி மணிகள், கிரிஸ்டல் கற்கள், சங்குகள், கண்ணாடி கற்கள், மரத் துண் டுகள், பேஷன் முத்துக்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை இரண்டு கால்களிலும் அணிய லாம். அல்லது ஒரு வலது காலில் மட்டும் அணி யலாம். சிலர் கறுப்பு கயிற்றில் பின்னல் போல் செய்து ஆங்காங்கே மணிகள் இணைத்து காலில் கட்டி இருப்பார்கள். இவை ஜீன்ஸ், ஸ்கர்ட், பார்ட்டி உடைகளுக்கு அழ காக இருக்கும். அதே சமயம் டிசைனர் கொலுசுகளை கழுத்தில் அணியும் சோக்கராகவும் பயன்படுத்தலாம். சிலர் இதை பிரேஸ்லெட்டாவும் பயன் படுத்துகிறார்கள்.

கொலுசு எப்படியிருந்தாலும் அழகுதான்.

Leave a Comment