என்ன செய்தார் சைதை துரைசாமி 425
ஆங்கில மருத்துவம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த நேரத்தில், சித்த மருத்துவத்திற்கு மீண்டும் தமிழகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கச் செய்தவர் மேயர் சைதை துரைசாமி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஏனென்றால் டெங்கு நோய்க்கு நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறு சிறந்த முறையில் பயனளிக்கின்றன என கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் அளித்த ஆய்வு ரிப்போர்ட் அடிப்படையில் பிரபல நாளிதழ்களில், அரசு சுகாதாரத் துறை மூலம் முழுப்பக்க விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு முழு காரணகர்த்தா மேயர் சைதை துரைசாமி என்பது தெரியவந்ததும் மக்களிடம் பெர்ம் பாராட்டு கிடைத்தது.
நாளிதழ்களில் வெளியான விளம்பரம் தமிழக மக்களுக்கு மிகப்பெரும் விழிப்புணர்வை உண்டாக்கியது. இதையடுத்து அரசு மருத்துவ மனைகள், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திவரும் மருத்துவமனைகளில் நில வேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலைச் சாறு இலவசமாக வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆங்கில வைத்தியம் மேற்கொள்ளும் அரசு மருத்துவமனைகளில் எல்லாம் சித்த வைத்தியத்தைச் சேர்ந்த நிலவேம்புக் கஷாயமும், பப்பாளி இலைச்சாறும் கிடைக்கிறது என்றதும் மக்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கை வந்தது. இதன் மூலம் டெங்கு நோய் குறித்த அச்சம் குறையத் தொடங்கியது. மருந்து இருக்கிறது என்ற எண்ணமே மக்களுக்கு நோய் மீதான அச்சத்தைக் குறைத்தது என்றும் சொல்லலாம்.
இதற்கெல்லாம் காரணகர்த்தா மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.