முதல்வர் ஜெயலலிதாவின் பாராட்டு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி 423

மேயர் சைதை துரைசாமியை ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக, திறமையான கட்சி நிர்வாகியாக, சிறந்த நிர்வாகியாக முதல்வர் ஜெயலலிதா நன்கு அறிவார். ஆனால், ஆங்கில மருத்துவத்தால் மருந்து இல்லை என்று கைவிடப்பட்ட டெங்கு நோய்க்கு சித்த மருந்துகளுடன் வந்து நிற்பார் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.

அதுவும் கிங் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளுடன் வந்து கொடுத்ததைக் கண்டதும் ஜெயலலிதா வியப்பின் உச்சிக்கே போய்விட்டார். ஒவ்வொரு நாளும் டெங்கு நோய் குறித்த மக்கள் அச்சத்தைத் தணிக்க வழியே இல்லாமல் தவித்துக்கொண்டு இருந்த நேரத்தில், மாமருந்து கொடுத்திருக்கிறீர்கள். உங்களால் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, சித்த வைத்தியத்திற்கும் பெரு நன்மை கிடைக்கப் போகிறது என்று மனம் விட்டு பாராட்டினார்.

அடுத்தபடியாக, இந்த மருந்தை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்று ஒரு கேள்வியை ஜெயலலிதா கேட்டார். அதற்கும் மேயர் சைதை துரைசாமி ஒரு பதில் தயாராக வைத்திருந்தார்.

சித்த மருந்துகள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை வரவேண்டும். எனவே, நிலவேம்புக் கஷாயத்தையும் பப்பாளி இலைச் சாற்றையும் அரசு அதிகாரபூர்வ மருந்தாக அறிவிக்க வேண்டும். இந்த மருந்துகளுக்கு அரசு அங்கீகாரம் இருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு முழு நம்பிக்கை வரும். இந்த நம்பிக்கையே மக்களுக்கு டெங்கு மீது இருக்கும் அச்சத்தைப் போக்கிவிடும் என்று சொன்னவர், அதற்கான வழியையும் தெரிவித்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment