• Home
  • சக்சஸ்
  • ஏழ்மையிலும் சாதித்த கிரிக்கெட் வீரர்கள்

ஏழ்மையிலும் சாதித்த கிரிக்கெட் வீரர்கள்

Image


கிரிக்கெட்டை, பணக்காரர்களின் விளையாட்டு என்று சொல்வார்கள். ஆம், அதில் ஒரு வீரர் தேசிய அளவில் விளையாடுவதற்கு அவருடைய பின்புலமும் பிரகாசமாக இருக்க வேண்டும். ஒருசில வீரர்கள் தனது தந்தைவழி அல்லது குடும்ப பின்னணி மூலம் கிரிக்கெட்டுக்குள் நுழைவார்கள். ஆனால் சில வீரர்கள் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் குடும்ப கஷ்டங்களுக்கு மத்தியில் தனது திறமையின் மூலம் தேசிய அணியில் இடம்பிடித்திருப்பார்கள். ஆம், அதில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனும் ஒருவராக இருக்கிறார். இப்படி, இவரைப்போல் இந்திய அணியில் வறுமை, கஷ்டங்களுக்கு மத்தியில் இடம்பிடித்து சாதனை படைத்த ஒருசிலரை இங்கே பார்ப்போம்.


இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான்


சகோதரர்களான இவர்கள் இருவரும் இந்திய அணியில் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக விளையாடியவர்கள். யூசுப் பதான் பெரிய அளவில் சாதிக்காவிட்டாலும், இர்பான் பதான் ஒரு சிறந்த வீரராக இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார். இவர்களுடைய தந்தை, பள்ளிவாசலை சுத்தம் செய்பவராக இருந்தவர். அதனால், குடும்பத்தில் வறுமை. என்றாலும் பல கஷ்டங்களுக்கு நடுவில் தன் குழந்தைகளின் எதிர்கால கனவை நனவாக்கினார். அதை உணர்ந்து, தன்னுடைய திறமையின் மூலம், அவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டனர்.

உமேஸ் யாதவ்


வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை சுரங்க வேலை பார்க்கும் ஒரு கூலித் தொழிலாளி. வறுமையின் காரணமாக 12ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத உமேஷ் யாதவ் கிரிக்கெட் விளையாட்டில் திறமையின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்து இன்று உச்சம் தொட்டிருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா
ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து இந்திய அணிக்குள் நுழைந்தவர். அவருடைய தந்தை இரவுநேரக் காவலாளியாக வேலை பார்த்தவர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். தவிர, ஜடேஜாவும் தந்தைகூடவே வேலை பார்த்தவர் ஆவார்.

புவனேஸ்வர் குமார்
வேகப்பந்து வீச்சாளரான புவ்னேஸ்வர் குமாரும் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவரே. கிரிக்கெட் விளையாடுவதற்கு பயிற்சிகளை மேற்கொள்ளும்போது ஒரு சப்பாத்து வாங்குவதற்குக்கூட அவரிடம் பணம் இல்லையாம். அவருடைய சகோதரியின் உதவியின் மூலம் கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பித்து என்று இந்திய அணியில் ஒரு சிறந்த பந்து வீச்சாளராக மாறியிருக்கிறார்.

மொஹமட் சிராஜ்
வேகப்பந்து வீச்சாளரான இவரும், வறுமையின் பயணத்தைக் கடந்துதான் உயர்ந்த நிலைக்கு வந்தவர். அவருடைய தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவருடைய வருமானத்தில்தான்  ஒட்டுமொத்த குடும்பத்தையும் கவனித்து வந்தார். ஆனால், மகனின் சாதனையைக் காண்பதற்கு முன்னாலேயே அவர் தந்தை, மரணத்தைத் தழுவிவிட்டார்.

 டி.நடராஜன்
தமிழக வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜனும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.  அவர், பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் மிகுந்த சவால்களுக்கு மத்தியிலும் இன்று இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். நடராஜனின் தந்தை ஒரு நெசவு தொழிலாளி, தாயார் வீதியோரத்தில் பெட்டிக் கடையில் சூப் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார்.


இவர்களைத் தவிர முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மஹேந்திர சிங் டோனி, சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், முனாப் பட்டேல் ஆகியோரும் வறுமைக்கும் சவால்களுக்கும் மத்தியில் இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment