மருத்துவ ஆச்சர்யம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி விஜய் வரைக்குமான பிரபல ஆண்களின் கண்களில் அதீத நம்பிக்கை வழிவதைப் பார்க்க முடியும். இந்த நம்பிக்கையே அவர்களுடைய கண்களைக் கவர்ச்சியாக மாற்றுகிறது.
அதேபோல் நயன்தாரா தொடங்கி கல்யாணி வரையிலான நடிகைகளின் கண்களைப் பார்த்தால், அதில் உயிரோட்டம் தென்படும். கண்களின் அசைவு மென்மையாக இருக்கும். இந்த மென்மையே பெண்களின் பார்வையை கவர்ச்சியாக மாற்றுகிறது.
உண்மையில் எல்லோருடைய பார்வையும் இயல்பானது மட்டுமே. ஆனால், மனசுக்குப் பிடித்தவர்கள், நெருக்கமானவர்களைப் பார்க்கும்போது மட்டுமே அந்த கண்கள் அதீத கவர்ச்சி கொண்டதாக மாறுகிறது. இந்த வகையில் ஆண், பெண் இருவரின் கண்களும் கவர்ச்சியாக இருக்க முடியும்.
அறிவியல் அடிப்படையில் காதல் கொண்ட கண்களின் பார்வை மென்மையாகவும் சிரிப்புடனும் திகழும். பேச அழைப்பதாக இருக்கும். அதுவே காமம் கொண்ட கண்களின் பார்வை அழுத்தமாகவும், ஆழமாகவும் இருக்கும். அந்த கண்களில் சிரிப்பு இருக்காது. நிலை குத்திய பார்வை இருப்பதைக் காண முடியும். இந்த ஆயுதத்தை மிகச்சரியாக வீசுபவர்களால் மட்டுமே காதல், காமம் ஆகியவற்றைக் கண்டறியவும், சிக்கவும், தப்பவும் முடியும்.