• Home
  • மனம்
  • பிள்ளைக்கு அம்மா ஆபத்தாக மாறுவார் என்று தெரியுமா..?

பிள்ளைக்கு அம்மா ஆபத்தாக மாறுவார் என்று தெரியுமா..?

Image

மருத்துவ ஆச்சர்யம்

தனக்கு பிறரால் ஆபத்து இருக்கிறது என்ற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு. தன்னுடைய வளர்ச்சி அல்லது வெற்றி பிடிக்காமல் எதிரிகள் ஆபத்து உருவாக்கலாம் என்பது லாஜிக்கான உணர்வு. அதேநேரம், தனக்கு நெருக்கமான சொந்தக்காரர்களே நம்முடைய எதிரியாக இருக்கிறார்கள். அவர்களால் தன் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்ற எண்ணம் மன நோயாக கருதப்படுகிறது.

இதை மருத்துவத்தில் அதீத சந்தேகம் எனப்படும் பாரானியா நோய் என்கிறார்கள். எல்லோருக்கும் ஒரு சில நேரங்களில் இப்படி சந்தேகம் உருவாகி, அடுத்த கணமே மறைந்துவிடும். ஆனால், ஒருசிலருக்கு அந்த எண்ணமே எல்லா நேரமும் நிரம்பிவழியும். பெற்ற தாய், தந்தையையும் எதிரியாகவே நினைப்பார்கள்.

இந்த எண்ணம் கொண்டவர்களுக்கு பயம் இருக்கும். தன்னைப் பற்றி எப்போதும் பிறர் தவறாகப் பேசுகிறார்கள், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்வார்கள். இப்படிப்பட்ட நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அவசியம்.  இந்த சந்தேகபுத்தி காரணமாக தனக்கு அல்லது பிறருக்கு இவர்கள் ஆபத்தை உருவாக்கலாம். எனவே, இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை, ஆலோசனை, ஆதரவு போன்றவை அவசியம்.

Leave a Comment