மருத்துவ ஆச்சர்யம்
தூரத்தில் ஒரு மாடு வேகமாக வருகிறது என்றால், அதை கண்கள் பார்த்து தகவல் அனுப்புவதற்குள், ஓடுவதற்கு மூளை உத்தரவு கொடுத்துவிடுகிறது. அந்த வகையில் மூளை கண்களைவிட வேகமாக செயல்படுகிறது என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
உடல் எடையில் மூளையின் பங்கு சுமார் 2% மட்டும்தான். ஆனால், உடல் ஆற்றலின் 20% மூளையால் பயன்படுகிறது. மூளையில் இருக்கும் மின்னழுத்த சிக்னல்கள் 20 வாட் மின்சாரத்துக்கு சமமானது. அதேநேரம், மூளைக்கு வலி என்ற உணர்வே கிடையாது. அதனால், மூளையில் ஆபரேஷன் செய்யும்போது, நோயாளி விழித்திருந்து அதை வீடியோவில் பார்க்க முடியும்.
மூளையில் நினைவுகளை சேமிக்கும் பகுதி 3 வயதில் தான் முழுமையடைகிறது. எனவே, அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே மூளை சேமித்துவைக்கிறது. மகிழ்ச்சியான அல்லது துயரமான நிகழ்வுகளை மட்டுமே மூளை சேமிக்கிறது, சாதாரண விஷயங்களை சேமிப்பதில்லை. ஹிப்னாடிசம் மூலம் மீட்கப்படும் நினைவுகள் எல்லாமே உண்மை என்று சொல்ல முடியாது. மூளை சில நேரங்களில் பொய்யான நினைவுகளை உருவாக்கித் தரலாம். ஆகவே, நினைவில் இருப்பவை எல்லாமே உண்மை அல்ல.